‘குறட்டை’யை விரட்டு
- Details
- Category: ஆரோக்கியம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6059
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
அரக்கோணத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 50), தனக்கு ஏற்பட்ட ‘ஆயில் புல்லிங்’ அனுபவத்தைப் பற்றிக் கூறினார்:
“எல்லோரையும் போல நான் அமைதியாக தூங்குவதில்லை. தூங்கும்போது சத்தமாக குறட்டை விடுவேன்.
நிசப்தமான இரவு நேரத்தில் என்னுடைய குறட்டைச் சத்தம் பலரையும் பயமுறுத்திக்கொண்டு இருந்தது.
என் பேரன், பேத்திகள்கூட அருகில் படுப்பதற்கு பயந்தார்கள்.
குறட்டை இல்லாமல் தூங்குவது எப்படி என்பதைப் பற்றி பலரிடமும் நான் கருத்து கேட்டேன். யாராலும் அதற்கான வழியைக் கூறமுடியவில்லை.
ஒருநாள், என்னுடைய நீண்டகால நண்பரைச் சந்தித்தேன். அவரிடம் என்னுடைய குறட்டைவிடும் செய்கையைப் பற்றிக் கூறினேன்.
அவர், ‘தினந்தோறும் காலையில் எழுந்ததும் நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், நாளடைவில் குறட்டைச் சத்தம் நின்றுவிடும். தூக்கமும் நிம்மதியாக இருக்கும்’என்று கூறினார்.
அதேபோல, நல்லெண்ணெய்யைக் கொப்பளிக்க ஆரம்பித்தேன். எதைச் செய்ய மறந்தாலும், காலையில் எழுந்ததும், ‘ஆயில் புல்லிங்’ செய்வதை நான் மறப்பதே இல்லை.
ஒரு மாதம் ‘ஆயில் புல்லிங்’கை விடாமல் செய்தேன். அதனால், நீண்டகாலமாக என்னை துன்பத்தில் ஆழ்த்தி வந்த குறட்டைப் பழக்கம், படிப்படியாக என்னை விட்டுப் போய்விட்டது. இப்போது, குறட்டையே இல்லாமல் என் இரவுகள் அமைதியாகக் கழிகின்றன.
குறட்டை விடாமல் நான் தூங்குவதால், என் குடும்பத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.
பலரின் வெறுப்புக்கும் இழிச் சொல்லுக்கும் ஆளான நான், இப்போது எல்லோராலும் நேசிக்கப்படுகிறேன்.
என் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. துன்பத்தால் துவண்டிருந்த மனசு லேசாகிவிட்டது. பேரன், பேத்திகள் இப்போது என்னோடுதான் தூங்குகிறார்கள்.
குறட்டை விடும் பழக்கத்தை என்னிடம் இருந்து முழுமையாக விரட்டிவிட்டு, இரவு நேரத்தில் என்னை நிம்மதியாக தூங்கவைக்கும் இதயம் நல்லெண்ணெய்க்கு நன்றி.”