பூரி
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 3037
பூரி
(Poori)
தயாரிக்கும் நேரம் - 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 40 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• மைதா - 500 கிராம்
• உப்புத்தூள் - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 300 மில்லி லிட்டர்
செய்முறை :
மைதா மாவுடன் ஒரு மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய், உப்புத்தூள், தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, மூடி வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய வைக்கவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாகச் செய்து, வட்டமாகத் தேய்த்து, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.