மசால் வடை
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 3079
மசால் வடை
(Masal Vada)
தயாரிக்கும் நேரம் - 15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 30 நிமிடங்கள்
6 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• கடலைப் பருப்பு - 500 கிராம்
• பெரிய வெங்காயம் - 1
• பச்சை மிளகாய் - 4
• கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
• உப்பு - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 300 மில்லி லிட்டர்
செய்முறை :
கடலைப் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து, ஊறியபின் இதிலிருந்து இரண்டு மேஜைக்கரண்டி அளவு பருப்பை தனியே எடுத்து விட்டு பரபரப்பாக கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன், தனியாக எடுத்து வைத்த கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, உப்புத்தூள் இவற்றைக் கலந்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வடைகளைத் தட்டி, எண்ணெய்யில் போட்டுப் பொன் நிறமாகப் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.