மை வீக் வித் மரிலின் - Page 3
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4324
ஒரு இரவு வேளை. Colinஐ Parksideஇல் உடனே வரும்படி அழைக்கிறார்கள். தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு, எழுந்திருக்காமல் அறைக்குள் படுத்திருக்கிறாள் மரிலின் என்ற தகவல் கிடைக்கிறது. புயலென அங்கு செல்கிறான் காலின். கதவைத் தட்டிப் பார்க்கிறான். கதவு திறக்கப்படவில்லை. சிறிது நேர யோசனைக்குப் பிறகு, ஒரு உயரமான ஏணியைக் கொண்டு வரச் சொல்லி, அதில் ஏறி, சாளரத்தின் வழியாக மரிலினின் அறைக்குள் அவன் நுழைகிறான். ஆடைகள் நழுவிக் கிடக்க, பாதி மயக்கத்தில் கிடக்கிறாள் மரிலின். 'நீ எப்படி இங்கே வந்தாய்?' என்று அவள் கேட்க, 'நான் ஏணியில் ஏறி, சாளரத்தின் வழியாக வந்தேன்' என்கிறான் காலின். அவனை இறுக அணைத்து முத்தமிடுகிறாள் மரிலின். 'உனக்காக வீட்டில் உன் மனைவி காத்திருப்பாளே?' என்று அவள் கேட்க, 'எனக்கு இன்னும் திருமணமாகவில்லை' என்று கூறுகிறான் காலின். அப்போது 'எனக்கு மூன்று முறை திருமணம் நடந்திருக்கிறது' என்று கூறுகிறாள் Marilyn. தொடர்ந்து 'உனக்கு அப்பா, அம்மா இருக்கிறார்களா?' என்று அவள் கேட்க, 'ஆமாம்... இருக்கிறார்கள்' என்று காலின் கூறுகிறான். அப்போது Marilyn 'நான் சிறுமியாக இருக்கும்போதே என் தாய் அனாதைகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டு விட்டாள். என் தந்தை யாரென்றே எனக்கு தெரியாது. நான் பல பெண்களும் வளர்க்க, வளர்ந்திருக்கிறேன்' என்று கூறுகிறாள் - சோகமான குரலில். அந்தச் சமயத்தில் Marilynஐப் பார்க்கும்போது, அவள் மீது நமக்கு பரிதாபமும், இரக்கமும் உண்டாகின்றன. அன்று இரவு காலினை தனக்கு அருகிலேயே படுத்துக் கொள்ளும்படி கூறுகிறாள் Marilyn. 'நீங்கள் படவுலகை இனி விட்டு விடுங்கள்' என்கிறான் Colin. அதற்கு 'ஏன்? நீ என்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா?' என்று மரிலின் கேட்க, 'ஆமாம்...' என்கிறான் Colin- தன்னை மறந்து. 'இல்லை... நான் படவுலகை விடுவதாக இல்லை' என்கிறாள் மரிலின்.
மறுநாள் இரவு தன் உடலில் வலி அதிகமாக இருப்பதாக கூறுகிறாள் மரிலின். தான் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகப்படுவதாக அவள் கூறுகிறாள். அவளைப் பரிசோதித்து விட்டு வெளியேறும் டாக்டரிடம் 'அவங்க கர்ப்பமாக இருக்காங்களா?' என்று காலின் கேட்க, 'அது அவங்களோட தனிப்பட்ட விஷயம். உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்கிறார் டாக்டர். மரிலின் காலினிடம் 'எல்லாவற்றையும் இனி நாம் மறந்துவிட வேண்டும்' என்கிறாள். அதற்கு அவன் 'நான் எதையும் மறக்க மாட்டேன்' என்கிறான்.
மறுநாள் Marilyn உற்சாகமாக படப்பிடிப்புத் தளத்திற்கு வருகிறாள். மிகவும் அருமையாக நடிக்கிறாள். அவளுடைய நடிப்பையும், நடனத்தையும் சிலிர்த்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் Laurence Olivier. படப்பிடிப்பு அத்துடன் முடிவடைகிறது. இயக்குநரிடம் விடை பெற்றுக் கொண்டு, Marilyn தளத்திலிருந்து வெளியேறுகிறாள். Colin ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறான்.
'நான் தொடர்ந்து படங்களை இயக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். என் ஆசைகள் அனைத்தையும் கொன்று விட்டாள் Marilyn. இனி நான் திரும்பவும் நாடக உலகிற்கே போவதென தீர்மானித்து விட்டேன்' என்கிறார் காலினிடம் Olivier.
Wardrobe Assistant ஆன Lucy காலினிடம் 'என்ன, Marliyn உன் இதயத்தை நொறுக்கி விட்டாளா?' என்று கேட்க, 'ஆமாம்...' என்கிறான் காலின். அதற்கு அவள் 'உனக்கு அது தேவைதான்...' என்கிறாள்- புன்னகைத்துக் கொண்டே.
ஒரு லோக்கல் barஇல் கவலையுடன் மது அருந்திக் கொண்டிருக்கிறான் காலின். அங்கிருப்பவர்கள் அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் மரிலின் அங்கு வருகிறாள். 'காலின், நீ எனக்குச் செய்த உதவிகளை நான் மறக்க மாட்டேன். உன்னிடம் விடை பெற்றுக் கொள்வதற்காக நான் இங்கு வந்தேன்' என்கிறாள். அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்க்கிறான் காலின்.
காலை வேளை. ஒரு முத்தத்தைப் பரிசாக தந்துவிட்டு, காருக்குள் ஏறுகிறாள் மரிலின். கார் நீங்குகிறது. ஓடிக் கொண்டிருக்கும் காரையே பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறான் காலின்.
சிறிய திரையரங்கம். படமாக்கப்பட்ட காட்சிகள் திரையில் ஓடிக் கொண்டிருக்கின்றன. திரையில் Marilyn Manroe ஆடுகிறாள்... பாடுகிறாள்... நடிக்கிறாள்... குதிக்கிறாள்... சிரிக்கிறாள்.
இயக்குநர் Laurence Olivier எழுந்து செல்ல, அந்த கனவு தேவதையின் அசைவுகள் ஒவ்வொன்றையும் கண்களை அகல திறந்து வைத்து பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான் Colin Clark.
Marlin Monroeவாக படம் முழுக்க நடிப்பில் முத்திரை பதித்திருப்பவர் - Michelle Williams.
Colin Clark ஆக Eddie Redmayne (அடடா! என்ன நடிப்பு!)
Laurence Olivier ஆக Kenneth Branagh.
Lucy ஆக Emma Watson
1956 ஆம் ஆண்டில் மரிலின் மன்றோ 'The Prince and the Show girl' படத்திற்காக நடித்த அதே Pinewood studiosவில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது.