மீசை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7548
மரணத்திற்குப் பிறகும் அவை சிறிய அளவில் வளரும் என்று உனக்குத் தெரியுமல்லவா? மற்றவர்கள் ஒரு வாரம் வரைக்கும் சவரம் செய்யதாவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோருக்கும் ஃப்ரெஞ்ச் மீசைகள் இருந்தன. ‘என் குழந்தை... அந்த தாடியுள்ள நண்பர்களுடன் என்னைக் குழிக்குள் போட்டு மூடி விடாதே! நான் உன்னுடைய அண்ணன்...’ என்று அவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் கூறுவதைப் போல எனக்குத் தோன்றியது.
நான் அழுதேன். ம்ஹா! அவர்களை... அந்த இறந்துபோன அப்பிராணி மனிதர்களை எனக்குத் தெரியும் என்றாலும்கூட, அவர்களுக்காக நான் அழுதேன்.
உன்னிடம் இந்தக் கதையைக் கூறுவதன் மூலம் நான் ஒரு தவறைச் செய்துவிட்டேன். கவலை வயப்பட்டு, அதிகமாக எதுவும் பேச முடியாமல், நான் இதோ... இங்கே உட்கார்ந்திருக்கிறேன். என் பிரியமான லூஸி ஸ்வஸ்தி, நான் உன்னை இதயப்பூர்வமாக அணைக்கிறேன். மீசை நீண்ட காலம் வாழட்டும்!
ஜூன்.
கய்தெ மாப்பசானுக்கு சமர்ப்பிக்கிறாள்.