இணையதளத்தில் நான் படித்த சில தகவல்கள்
- Details
- Category: ஆரோக்கியம்
- Published Date
- Written by சுரா
- Hits: 4718
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
1
‘எனது தலையில் இருந்த முடிகள் நிறைய உதிரத் தொடங்கின. ‘ஆயில் புல்லிங்’செய்ததன் மூலம் எனது தலையில் முடிகள் மீண்டும் வளர்ந்தன’என்று ஒருவர் கூறியிருக்கிறார்.
2
‘எனது பற்கள் மிகவும் பலவீனமாக இருந்தன. ஈறு நிறமற்று காணப்பட்டது. பற்களுக்கு இடையே என்ன காரணத்தாலோ ரத்தம் கசிந்துகொண்டே இருந்தது.
நான் மூன்று மாதங்களாக ‘ஆயில் புல்லிங்’செய்கிறேன். இப்போது பற்கள் உறுதியாகிவிட்டன. ஈறு ரோஜா கலருக்கு வந்துவிட்டது. பற்களுக்கு இடையே ரத்தம் கசிவது முழுமையாக நின்றுவிட்டது’ என்று ஒருவர் கூறியிருக்கிறார்.
3
ஒரு பெண், ‘என் மார்பகத்தில் ஒரு பகுதி சற்று கருப்பு படர்ந்து காணப்பட்டது. ஒரு வாரம் நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தினேன். மார்பில் இருந்த கருப்பு நிறம் மறைந்துவிட்டது‘ என்று கூறியிருக்கிறார்.
4
‘என் பற்கள் சற்று நிறம் குறைந்து காணப்பட்டன. நல்லெண்ணெய்யில்‘ஆயில் புல்லிங்’பண்ணியபிறகு, மிகவும் வெள்ளையாக மாறி, பற்கள் இப்போது பிரகாசித்துக்கொண்டு இருக்கின்றன‘ என்று ஒருவர் கூறியிருக்கிறார்.
5
‘என் வாயில் வீக்கம் இருந்தது. சாப்பிடும்போது எதிர்பாராமல் நானே கடித்துக்கொண்டதால் உண்டான புண். தாங்கமுடியாத வேதனையை தந்தது. ‘ஆயில் புல்லிங்’பண்ணினேன். வீக்கம் வற்றி, காயமே இல்லாமல் போனது’என்று ஒருவர் கூறியிருக்கிறார்.
6
‘நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்தபிறகு, எனது தோல் பளபளப்பாக மாறிவிட்டது’என்கிறார் ஒருவர்.
7
‘என் முகத்தில் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் இருந்தன. ஆறு மாதங்கள் ‘ஆயில் புல்லிங்’செய்தபின் முகத்தில் இருந்த சிவப்புப் புள்ளிகள் அனைத்தும் எங்கு போய் மறைந்தனவோ தெரியவில்லை’என்கிறார் ஒருவர்.
8
‘இரண்டு மாதங்களாக நான் நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளிக்கிறேன். ‘ஆயில் புல்லிங்’பண்ண ஆரம்பித்தபிறகு, முன்பைவிட அதிக நேரம் என்னால் கம்ப்யூட்டருக்கு முன்னால் கண் எரிச்சல் இல்லாமல் உட்கார்ந்திருக்க முடிகிறது’என்று ஒரு பெண்மணி கூறியிருக்கிறார்.
நம்மவர்கள் கூறுவதற்கும் வெளிநாட்டவர்கள் கூறுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? நிறம், மொழி, நாடு போன்ற அடையாளங்களைத் தவிர.
இங்கு உள்ளவர்கள் தங்களின் நோய்கள் குணமாக எப்படி ‘ஆயில் புல்லிங்’கில் ஈடுபடுகிறார்களோ, அதே போலத்தான் வெளிநாட்டினரும் செய்கிறார்கள்.
இணையதளத்தின் மூலமும், வெளிநாட்டு பத்திரிகைகள் மூலமும் நான் தெரிந்துகொண்ட உண்மை இது!