வெள்ளைப் பற்கள் !
- Details
- Category: ஆரோக்கியம்
- Published Date
- Written by சுரா
- Hits: 9372
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
அவரைத் தொடர்ந்து ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்தார். பெயர் பாலகிருஷ்ணன். நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி, தான் கண்ட பலனை அவர் சொன்னார்:
“என் பற்களில் மஞ்சள் நிறத்தில் கறை படிந்திருந்தது. என்ன காரணத்தால் வந்தது என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. கறையைப் போக்குவதற்கு என்ன வழி என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன்.
டூத் பேஸ்ட் வைத்து, பற்கள் மீது பிரஷ்ஷால் அழுத்தி தேய்த்தால், கறை முற்றிலுமாக நீங்கிவிடும் என்று நம்பினேன். அந்த நம்பிக்கையுடன் பற்பசையை வைத்து அழுத்தித் தேய்த்தேன். என்ன பிரயோஜனம்..?
அப்போது எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், ‘நல்லெண்ணெய்யை பயன்படுத்தி கொப்பளித்தால் பற்களில் இருக்கும் கறை முற்றிலுமாக மறைந்துவிடும்’என்றார். அவர் கூறியது உண்மையாக இருக்குமா என்பதை நடைமுறைப்படுத்திதான் பார்த்துவிடுவோமே என்ற நம்பிக்கையுடன்‘ஆயில் புல்லிங்’செய்வதில் ஈடுபட்டேன்.
பத்து நாட்கள் நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்திருப்பேன். உண்மையாகவே அப்படியொரு சந்தோஷ முடிவு உண்டாகும் என்பதை நான் கனவில்கூட நினைக்கவில்லை. என்னுடைய பற்களில் இருந்த கறை கொஞ்சமாவது இருக்க வேண்டுமே... ம்ஹும்..! மஞ்சள் கறை முற்றிலுமாக நீங்கிவிட்டது. பற்கள் வெள்ளை வெளேர் என்று பிரகாசிக்கத் தொடங்கின. மஞ்சள் கறையை முழுமையாக அழிக்கக்கூடிய அற்புத ஆற்றல் நல்லெண்ணெய்க்கு இருப்பது ஆச்சரியப்பட வைத்தது!”