
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
வில்லிவாக்கம் முருகேசன், வயது 45. இவர் தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’ அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்:
“சில மாதங்கள் ராத்திரியில் சரியாக தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். அதற்கு முன்பெல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லாமல், சராசரி மனிதனாக உறங்கிக்கொண்டு இருந்தவன்தான் நானும்.
ஆனால், வாழ்க்கையில் உண்டான சில பிரச்னைகள்... சில குடும்பச் சுமைகள்...
உடலில் இருந்த பல கோளாறுகள் என்று என்ன காரணமோ தெரியவில்லை. இரவு நேரங்களில் தூக்கம் என்பதே இல்லை.
படுக்கையில் படுத்து, இப்படியும் அப்படியுமாக புரண்டுகொண்டு இருப்பேனே தவிர, ஒரு நிமிடம்கூட கண்களை மூடமுடியாது.
ராத்திரியில் தூங்காமலே இருந்தால், பகல் பொழுதில் எப்படி வேலை செய்ய முடியும்?
அலுவலகத்தில் இருக்கும் பணி நேரத்தில், உட்கார்ந்திருக்கும்போது, ஒரே தூக்கக் கலக்கமாக இருக்கும். ஒருநாள் மேலாளர் என்னைப் பார்த்துவிட்டு,‘என்ன முருகேசன்? வேலையில் கொஞ்சம்கூட அக்கறையே இல்லாமல் அலுவலகத்தில் தூங்கி வழிந்துகொண்டு இருக்கிறாய்?’ என்று கேட்டார்.
அந்த வார்த்தைகளைக் கேட்டபோது என் மனசு என்னவோ பண்ணியது. துக்கம் தொண்டையை அடைத்தது.‘ராத்திரி சரியாக தூங்கவில்லை; தூக்கம் வரவில்லை’என்று அவரிடம் காரணம் கூறமுடியுமா?
சில நாட்கள் தூக்க மாத்திரை போட்டு தூங்க ஆரம்பித்தேன். ஆனால், ‘மருந்து, மாத்திரை இல்லாமல் தானாகவே தூங்குவதற்கு என்ன வழி?’ என்று விஷயம் தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்டேன்.
நான் விசாரித்த சிலரில், எனக்கு மிக நெருக்கமான நண்பர் அசோக்குமார். ஒருநாள் அசோக்குமார், ‘நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தால், நாளடைவில் ஆரோக்கியமாக தூக்கம் வரும்’என்று கூறினார்.
அவர் சொன்ன அரை மணி நேரத்துக்குள் கடை வீதிக்குச் சென்று, அங்கிருந்த ஒரு மளிகைக் கடையில், வாய் கொப்பளிப்பதற்கு என்றே சின்ன சின்ன சாஷேகளில் அறிமுகப்படுத்தியுள்ள ‘இதயம் வெல்த்’தை வாங்கினேன்.
மறுநாள் காலையிலேயே ‘ஆயில் புல்லிங்’செய்ய ஆரம்பித்தேன். என் அன்றாட வாழ்க்கையில்‘ஆயில் புல்லிங்’என்பது ஒரு தவிர்க்கமுடியாத நடவடிக்கையாகவே இப்போது மாறிவிட்டது.
தொடர்ந்து தவறாமல் நல்லெண்ணெய்யால் வாய் கொப்பளித்தேன். நாட்கள் செல்லச் செல்ல எனக்குள் உண்டான மாற்றத்தை என்னால் தெளிவாக உணரமுடிந்தது.
இரவு நேரத்தில் படுக்கையில் படுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே, உறக்கம் வந்து என்னை கட்டியணைத்துக்கொள்ள ஆரம்பித்தது. இரண்டாவது வாரத்திலேயே நானே ஆச்சரியப்படும் அளவுக்கு தூக்கம் என்னைத் தாலாட்டத் தொடங்கியது.
தூக்கம் வராமல், துக்கப்பட்டுக் கொண்டிருந்த நான், இப்போது எந்தவித கவலையும் இல்லாமல் ராத்திரி படுத்தால், பொழுது புலரும் போதுதான் எழுகிறேன். அவ்வளவு நிம்மதியாக தூங்குகிறேன்” என்று சொல்லி முடித்தபோது முருகேசன் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பு!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook