கறி சாப்ஸ்
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2351
கறி சாப்ஸ்
(Mutton Chops)
தயாரிக்கும் நேரம் - 30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 40 நிமிடங்கள்
8 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• சுத்தம் செய்த ஆட்டுக்கறி - 1 கிலோ
• மிளகு - 3 மேஜைக்கரண்டி
• பச்சை மிளகாய் - 6
• பூண்டு- 10 பல்
• சின்ன வெங்காயம் - 20
• தனியாத்தூள் - 3 மேஜைக்கரண்டி
• பட்டை- 4
• கிராம்பு- 6
• ஏலக்காய்- 4
• உப்பு - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 200 மில்லி லிட்டர்
செய்முறை :
கறியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகு, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், தனியாத்தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மசாலாவைப் போட்டு நன்றாக வதக்கவும்.
கறித் துண்டுகளைப் போட்டு ஐந்து நிமிடங்கள் வதக்கியபின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
கறி வெந்ததும், மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கி இறக்கி பரிமாறவும்.