
கோழிக் குழம்பு
(Chicken Gravy)
தயாரிக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 30 நிமிடங்கள்
6 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• சுத்தம் செய்த கோழிக்கறித் துண்டுகள் - 1 கிலோ
• பெரிய வெங்காயம் - 3
• தக்காளி - 2
• பூண்டு - 6 பல்
• இஞ்சி - 2 அங்குலம்
• மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
• மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
• மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
• சீரகத்தூள் - 4 மேஜைக்கரண்டி
• சீரகம் - 1 தேக்கரண்டி
• மிளகு - அரை தேக்கரண்டி
• சோம்பு - அரை தேக்கரண்டி
• பிரியாணி இலை - 1
• பட்டை - 4
• கறிவேப்பிலை - 1 ஆர்க்கு<
• உப்பு - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 100 மில்லி லிட்டர்
செய்முறை :
வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், மிளகு, சோம்பு, பிரியாணி இலை, பட்டை, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
நறுக்கி வைத்துள்ள பொருட்களை போட்டு வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போடவும்.
மிதமான தீயில் வைத்து கோழிக்கறி வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook