காளான் வறுவல்
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2087
காளான் வறுவல்
(Mushroom Fry)
தேவையான பொருட்கள் :
• காளான் : 200 கிராம்
• குடமிளகாய் : 1
• வெங்காயத்தாள் : 1 கட்டு
• ஸோயா சாஸ் (Soya Sauce) : 2 தேக்கரண்டி
• வினிகர் : 2 தேக்கரண்டி
• இஞ்சி : 2 அங்குலம்
• பூண்டு : 4 பல்
• பச்சை மிளகாய் : 2
• தக்காளி கெச்சப் (Tomato Ketchup) : 2 தேக்கரண்டி
• சில்லி சாஸ் (Chilli Sauce) : 1 தேக்கரண்டி
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
காளானை சுத்தம் செய்து மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
குடமிளகாய், வெங்காயத்தாள், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சில்லி சாஸ், தக்காளி கெச்சப், வினிகர், ஸோயா சாஸ், உப்புத்தூள் இவற்றை காளானுடன் கலந்து ஊற விடவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு வதக்கவும்.
வதங்கியபின் குடமிளகாயைப் போட்டு நன்றாக வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியபின் ஊறவைத்துள்ள காளானைப் போட்டுக் கிளறவும்.
மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
சிவக்க வதங்கியதும் நறுக்கிய வெங்காயத்தாள் போட்டு, நன்றாகக் கிளறி இறக்கி உபயோகிக்கவும்.