பருப்பு வாழைக்காய் மஸாலா கூட்டு
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2079
பருப்பு வாழைக்காய் மஸாலா கூட்டு
(Raw Banana Masala Koottu)
தேவையான பொருட்கள் :
• வாழைக்காய் : 2
• பெரிய வெங்காயம் : 1
• பூண்டு : 3 பல்
• பச்சைமிளகாய் : 2
• தேங்காய்துறுவல் : 1 மேஜைக்கரண்டி
• கருவேப்பிலை : சிறிது
• மஞ்சள்தூள் : 2 சிட்டிகை
• தனியா தூள் : 1 தேக்கரண்டி
• கடுகு : 1 தேக்கரண்டி
• சீரகம் : 1/2 தேக்கரண்டி
• உப்பு : தேவையானஅளவு
• இதயம் நல்லெண்ணெய் : 1 மேஜைக்கரண்டி
செய்முறை :
வாழைக்காயை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
பச்சை மிளகாய், பூண்டு, தனியாதூள், தேங்காய்துறுவல் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் இதயம் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
இத்துடன் அரைத்து வைத்துள்ள மஸாலாவைப் போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
வதங்கியபின் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.
இத்துடன் வேகவைத்துள்ள துவரம்பருப்பை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். வாழைக்காய் வெந்ததும் இறக்கி உபயோகிக்கவும்.