கருவேப்பிலை குழம்பு
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2416
கருவேப்பிலை குழம்பு
(Curry Leaves Gravy)
தேவையான பொருட்கள் :
• கருவேப்பிலை : 2 டம்ளர் அளவு
• சின்ன வெங்காயம் : 40
• பச்சை மிளகாய் : 3
• இஞ்சி : 1 அங்குலம்
• பூண்டு : 8 பல்
• புளி : தேவையான அளவு
• சோம்பு (பெருஞ்சீரகம்) : 1 தேக்கரண்டி
• வெந்தயம் : 1 தேக்கரண்டி
• மிளகாய்தூள் : 1 தேக்கரண்டி
• தனியா தூள் : எலுமிச்சை அளவு
• கடுகு : 1 தேக்கரண்டி
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 4 மேஜைக்கரண்டி
செய்முறை :
இளம்தளிரான கருவேப்பிலையை சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை உரித்து, நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, அரைத்துக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
தனியாதூள், மிளகாய்தூளை அரைத்துக் கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சோம்பு, வெந்தயம், போட்டுத் தாளித்து இத்துடன் அரைத்த இஞ்சி-பூண்டுக் கலவையைப் போட்டு வதக்கவும்.
அதன்பின் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயம், கருவேப்பிலை, அரைத்து வைத்துள்ள தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
வதங்கியபின் புளிக்கரைசலை ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் போடவும். குழம்பு கொதித்து, கெட்டியானதும் இறக்கி உபயோகிக்கவும்.