தேங்காய்பால் குழம்பு
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2092
தேங்காய்பால் குழம்பு
(Coconut Milk Gravy)
தேவையான பொருட்கள் :
• தேங்காய் : 1
• சிகப்பு மிளகாய் : 6
• பெரிய வெங்காயம் : 1
• தக்காளி : 1
• தனியாதூள் : 2 மேஜைக்கரண்டி
• சீரகத்தூள் : 1 மேஜைக்கரண்டி
• மஞ்சள்தூள் : 4 சிட்டிகை
• பட்டை : 1 துண்டு
• கிராம்பு : 2
• ஏலக்காய் : 1
• சோம்பு : 1 தேக்கரண்டி
• கசகசா : 2 தேக்கரண்டி
• கருவேப்பிலை : சிறிது
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
தேங்காயைத் துறுவி, கெட்டியான முதல் பால் எடுத்துக் கொள்ளவும்.
இரண்டாவது முறை எடுக்கும் பாலை தனியாக வைத்துக் கொள்ளவும்.
தனியாதூள், சீரகத்தூள், கசகசா, இவற்றை இரண்டாவது தேங்காய்பால் சிறிதளவு ஊற்றி வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், கருவேப்பிலை, போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
வதங்கியபின் அரைத்து வைத்துள்ள மஸாலாவைப் போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
நன்றாக வதங்கியபின், இரண்டாவது தேங்காய்பால் ஊற்றவும், தேவையான அளவு உப்பு போடவும்.
குழம்பு கொதித்து, கெட்டியானதும் முதல் தேங்காய்பாலை ஊற்றி, இறக்கி உபயோகிக்கவும்.
வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லாத சூழ்நிலையில் அவசரமாக குழம்பு தேவைப்பட்டால் தேங்காய்பால் குழம்பு தயாரித்து சமாளிக்கலாம்.
இட்லி தோசை பரோட்டா ஆகியவற்றிற்கு ஏற்றது.