உருளைக் கிழங்கு சாப்ஸ் மஸாலா
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2120
ஸ்பெஷல் மஸாலா தோசை
(Special Masala Dhosai)
தேவையான பொருட்கள் :
• உருளைக்கிழங்கு : 500 கிராம்
• மிளகாய்தூள் : 1 தேக்கரண்டி
• சோம்பு (பெருஞ்சீரகம்) : 1 தேக்கரண்டி
• சின்ன வெங்காயம் : 10
• பூண்டு : 6 பல்
• கரம் மஸாலாதூள் : 1/2 தேக்கரண்டி
• தேங்காய்துறுவல் : 3 மேஜைக்கரண்டி
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 3 மேஜைக்கரண்டி
செய்முறை :
உருளைக்கிழங்கை குழைந்து விடாமல் வேக வைத்து, தோல் நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, தேங்காய்துறுவல் இவற்றை வழு வழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கருவேப்பிலை போட்டுத் தாளித்து, அரைத்த மஸாலாவைப் போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
வதங்கியபின் வேக வைத்துள்ள உருளைக்கிழங்குத்துண்டுகள், மிளகாய்தூள், தேவையான அளவு சுடு தண்ணீர், உப்பு இவற்றைப் போடவும்.
மஸாலா பக்குவம் ஆனதும் கரம் மஸாலாதூள் போட்டு, ஒரு முறை கிளறி இறக்கி உபயோகிக்கவும்.