கத்தரிக்காய் - தேங்காய் மஸாலா
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2008
கத்தரிக்காய் - தேங்காய் மஸாலா
(Brinjal – Coconut Masala)
தேவையான பொருட்கள் :
• கத்தரிக்காய் : 250 கிராம்
• சின்ன வெங்காயம் : 30
• பச்சை மிளகாய் : 5
• தேங்காய்துறுவல் : 6 மேஜைக்கரண்டி
• பூண்டு : 5 பல்
• கருவேப்பிலை : சிறிது
• சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லித்தழை : 1 மேஜைக்கரண்டி
• மஞ்சள்தூள் : 4 சிட்டிகை
• சீரகம் : 1 தேக்கரண்டி
• கடுகு : 1 தேக்கரண்டி
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 3 மேஜைக்கரண்டி
செய்முறை :
கத்தரிக்காயை நறுக்கி முக்கால் வேக்காடாக வேகவைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், தேங்காய்துறுவல், சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
அரைத்து வைத்துள்ள மஸாலாவைப் போட்டு, எண்ணெய் மிதந்து நன்றாக வதங்கியதும் கத்தரிக்காயைப் போட்டு தேவையான அளவு உப்புத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும்.
கத்தரிக்காய் மென்மையாக வெந்ததும் கொத்தமல்லித்தழை போட்டு இறக்கி உபயோகிக்கவும்.
குறிப்புகள் : -
இஞ்சி, பூண்டை நறுக்கி சமைக்கும் பொழுது இஞ்சியின் தோல் மற்றும் பூண்டின் தோலை நீக்கியபின் அரைக்க வேண்டும். அரைத்துப் போடுவதாக இருந்தால் இஞ்சியின் தோலை நீக்கியோ, பூண்டை உரித்தோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இஞ்சியை மண் போக நன்றாகக் கழுவியபின் பயன்படுத்தலாம். பூண்டின் தோலை துடைத்துவிட்டு அரைக்கலாம்.