காய்கறி குருமா
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2195
காய்கறி குருமா
(Vegetable Kuruma)
தேவையான பொருட்கள் :
• உருளைக்கிழங்கு : 2
• பச்சை பட்டாணி : 150 கிராம்
• கேரட் : 1
• பீன்ஸ் : 100 கிராம்
• காலிஃப்ளவர் (சிறியது) : 1
• பெரிய வெங்காயம் : 2
• இஞ்சி : 2 அங்குலம்
• பூண்டு : 6 பல்
• பச்சை மிளகாய் : 3
• கசகசா : 1 மேஜைக்கரண்டி
• தேங்காய்த்துறுவல் : 4 மேஜைக்கரண்டி
• சோம்பு (பெருஞ்சீரகம்) : 1 தேக்கரண்டி
• மஞ்சள்தூள் : 2 சிட்டிகை
• ஏலக்காய் : 2
• கிராம்பு : 4
• பட்டை : 1 துண்டு
• ஓமம் : 1/2 தேக்கரண்டி
• பிரியாணி இலை : 1
• தயிர் : 3 மேஜைக்கரண்டி
• சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லித்தழை : 1 மேஜைக்கரண்டி
• எலுமிச்சைசாறு : 1 தேக்கரண்டி
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 4 மேஜைக்கரண்டி
செய்முறை :
உருளைக்கிழங்கை தோல் நீக்கி, சிறு சதுரமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக நறுக்கி, சுடுதண்ணீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் ஆனதும் வடிகட்டி வைக்கவும்.
கேரட், பீன்ஸை நறுக்கிக் கொள்ளவும்.
பட்டாணியை உரித்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
தயிரை கரண்டியினால் நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
பட்டை, கிராம்பு ஏலக்காய், ஓமம், பச்சைமிளகாய், கசகசா, தேங்காய்துறுவல், சோம்பு இவற்றை அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிரியாணி இலை போட்டுத் தாளித்து, இத்துடன் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
இத்துடன் இஞ்சி, பூண்டு அரைத்ததைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
அதன்பின் அரைத்த மஸாலாவைப் போட்டு நன்றாக வதக்கவும்.
மிளகாய்தூள், மஞ்சள்தூள், போடவும்.
இத்துடன் காய்கறிகளைப் போட்டு மேலும் மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கிய கலவையை குக்கருக்கு (Pressure Cooker) மாற்றி, தேவையான அளவு சுடு தண்ணீர் ஊற்றவும்.
உப்பு, தயிர் சேர்க்கவும்.
குக்கரை மூடி வைத்து வெயிட் போடவும்.
விசில் சப்தம் கேட்டதும் தீயை மிதமாக்கி ஐந்து நிமிடங்கள் ஆனபின் இறக்கி வைக்கவும். குக்கர் திறக்க வந்தபின், எலுமிச்சைசாறு, கொத்தமல்லித்தழை போட்டுக் கிளறியபின் உபயோகிக்கவும்.