பீர்க்கங்காய் தோல் சட்னி
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2103
பீர்க்கங்காய் தோல் சட்னி
(Ridge Gourd Chutney)
தேவையான பொருட்கள் :
• பீர்க்கங்காய் : 500 கிராம்
• தேங்காய்துறுவல் : 6 மேஜைக்கரண்டி
• பச்சை மிளகாய் : 5
• இஞ்சி : 1 அங்குலம்
• பூண்டு : 4 பல்
• உளுத்தம் பருப்பு : 1 தேக்கரண்டி
• புளி : 2 கோலி அளவு
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 1 மேஜைக்கரண்டி
செய்முறை :
பீர்க்கங்காயைக் கழுவி, தோலை நீக்கிக் கொள்ளவும்.
அரை டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, பீர்க்கங்காய் தோலை வேகவைத்து, இறக்கிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு போட்டுத் தாளித்து, இத்துடன் தேங்காய்துறுவல், புளி, இஞ்சி, பூண்டு இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும். இத்துடன் வேகவைத்துள்ள பீர்க்கங்காய் தோல், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
மறுபடியும் வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டுத் தாளித்து அரைத்து வைத்துள்ள பீர்க்கங்காய் தோல் கலவையைப்போட்டு மிதமான தீயில் வைத்து சில நிமிடங்கள் வதக்கி இறக்கி உபயோகிக்கவும்.