வாழைக்காய் சட்னி
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2922
வாழைக்காய் சட்னி
(Banana Chutney)
தேவையான பொருட்கள் :
• வாழைக்காய் : 2
• புளி : 2 கோலி அளவு
• பச்சை மிளகாய் : 2
• சிகப்பு மிளகாய் : 2
• வெந்தயம் : 1/2 தேக்கரண்டி
• கடுகு : 1 தேக்கரண்டி
• உளுத்தம் பருப்பு : 1/2 தேக்கரண்டி
• மஞ்சள்தூள் : 2 சிட்டிகை
• பெருங்காயத்தூள் : 1 சிட்டிகை
• சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லித்தழை : 1 தேக்கரண்டி
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
வாழைக்காயை தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு சிவக்க வதக்கி இறக்கிக் கொள்ளவும்.
மறுபடியும் வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்து, இத்துடன் பச்சைமிளகாய், சிகப்பு மிளகாய், புளி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியபின் தாளித்து, வதக்கிய பொருட்களுடன் தேவையான அளவு உப்பு, வதக்கி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து எடுத்து உபயோகிக்கவும்.