பல பருப்பு வடை
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2131
பல பருப்பு வடை
(Mixed Dhall Vadai)
தேவையான பொருட்கள் :
• உளுந்தம் பருப்பு : 200 கிராம்
• கடலைப்பருப்பு : 200 கிராம்
• சிறுபருப்பு : 200 கிராம்
• பச்சரிசி : 200 கிராம்
• துவரம்பருப்பு : 200 கிராம்
• சிகப்பு மிளகாய் : 6
• கருவேப்பிலை : சிறிது
• சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லித்தழை : 2 மேஜைக்கரண்டி
• தேங்காய் : 1 மூடி
• கடுகு : 1 தேக்கரண்டி
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 300 மி.லி.
செய்முறை :
உளுந்தம்பருப்பை தனியாக ஊற வைக்கவும்.
சிறு பருப்பை தனியாக ஊறவைக்கவும்.
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பச்சரிசி இவற்றைத் தனியாக ஊறவைக்கவும்.
ஊறியபின் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பச்சரிசி இவற்றை கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும்.
ஊற வைத்துள்ள உளுந்தம்பருப்பை தனியாக ஆட்டி பருப்பு வகைகள் சேர்த்து ஆட்டிய மாவுடன் கலந்து கொள்ளவும்.
தேவையான உப்பு சேர்க்கவும்.
தேங்காயைத் துண்டுகள் போட்டு மிக மிக மெல்லிய பற்களாக நறுக்கிக் கொள்ளவும்.
ஊற வைத்துள்ள சிறுபருப்பை தண்ணீரை வடித்து விட்டு மாவுடன் சேர்த்து, இத்துடன் தேங்காய்ப் பற்களையும் போட்டு நன்றாகக் கிளறவும்.
வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டுத் தாளித்து மாவில் கலக்கவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை கரண்டியால் எடுத்து எண்ணெய்யில் போட்டு வடைகளாகப் பொரித்து எடுத்து (Deep Fry) உபயோகிக்கவும்.
(மாவுப் பதம், வடை மாவுப் பக்குவத்தில் இருப்பது போல ஆட்டிக் கொள்ள வேண்டும்.)