மாடல் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6810
ரேஷன் துணி கிடைத்திருந்தால் சிறிது லாபாமாக இருந்திருக்கும்! ஆனால், என்ன செய்வது? கடைக்காரனிடமிருந்து அது கிடைக்க வேண்டாமா? எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், நல்ல துணியைக் கொண்டு ஒரு சட்டையைத் தைக்க வேண்டும் என்று பாப்பன் தீர்மானித்தான்.
சட்டைக்கான துணியுடன் சென்று அவன் பிரான்சிஸிடம் ஒப்படைத்தான். அவன் டேப்பை எடுத்து அந்த திருவாங்கோட்டைச் சேர்ந்தவனின் கழுத்தையும் உடலையும் மாறி மாறி அளந்தான்.
முதல் ஓணம் வந்தது. புதிய சட்டையை அணிந்து கொண்டு மனிதர்களுக்கு முன்னால் விருப்பம்போல நடந்து திரிய வேண்டும் என்று ஆசைப்பட்டான் பாப்பன். அந்த பண்டிகையைப் பற்றியும் புத்தாடை அணியப் போகிறோம் என்பதைப் பற்றியும் இருந்த உற்சாகத்தைத் தரக் கூடிய நினைப்பில் மூழ்கி அவனுடைய இதயம் குதித்துக் கொண்டிருந்தது. புதிய வேட்டியும் புதிய சட்டையும் அணிந்து கொண்டு சிலர் வெளியே நடக்க ஆரம்பித்திருந்தார்கள். தையல் கூலிக்கான பணம்கூட பாப்பனின் கையில் இல்லை. மாலை நேரம் வந்து விட்டது. எப்படியோ தையல் கூலியைத் தயார் பண்ணிக் கொண்டு பாப்பன் பிரான்சிஸைத் தேடிச் சென்றான்.
என் சட்டை...''- பாப்பன் சொன்னான். ''சட்டையைத் தயார் பண்ணி வைத்திருக்கிறேனே!'' பிரான்சிஸ் அதை எடுப்பதற்காகத் திரும்பினான். தேய்த்து மடித்து வைத்திருந்த சட்டையை பிரான்சிஸ் எடுத்தான். பாப்பன் அதை வாங்கினான். அதை முழுமையாக ஆராய்ந்தான். பாப்பனுக்கு வெறுப்பு உண்டானது. அவன் என்ன மனதில் நினைத்தானோ, அந்த மாதிரி அது இல்லை. அதற்கு அருகில் நெருங்கி வருகிற அளவிற்குக்கூட அது இல்லை. ஏற்றுக் கொள்ள முடியாத சட்டையைத் தேய்த்து பளபளப்பாக்கி வைத்திருந்ததைப் பார்த்து அந்த கிராமப் பகுதியைச் சேர்ந்தவன் ஆச்சரியப்பட்டு விடவில்லை.
விருப்பப்பட்ட சட்டைக்காகக் காத்திருந்த அந்த ஏழைக்கு வெறுப்பு உண்டானது. திருவோணத்தின் சந்தோஷக் கொண்டாட்டத்தில் தன்னுடைய தனித்துவத்திற்குக் காயம் உண்டாகி, வேதனையை அனுபவிப்பதைப்போல பாப்பன் உணர்ந்தான். அவனுடைய கண்களில் இருள் புகுந்தது.
எனக்கு இது வேண்டாம். இப்படியா சட்டையைத் தைப்பார்கள்?'' அவன் கேட்டான்.
ம்... என்ன?'' பிரான்சிஸ் ஆச்சரியப்பட்டான். அவன் தொடர்ந்து சொன்னான்: நீங்க இதை கொஞ்சம் போட்டுப் பாருங்க''.
பார்க்கும்போதே தெளிவாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு விஷயத்தை பயன்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று பாப்பன் நினைக்கவில்லை.
உண்மையாகச் சொல்லப் போனால்- தலை உள்ளே நுழைய வில்லை. அங்கு சில சுருக்கங்கள். மார்புப் பகுதியில் அளவுக்கும் அதிகமான இறுக்கம். கையோ பிடித்துக் கட்டியிருப்பதைப் போல இருந்தது! நல்ல விலை கொடுத்து வெட்கக் கேட்டை வாங்குவதற்கு அவன் விருப்பப்படவில்லை.
பாப்பனின் தோளில் இருந்து முழுங்காலுக்கு அருகில் இருக்கும் இறக்கத்தை பிரான்சிஸ் டேப்பைக் கொண்டு எடுத்திருந்தான். சாதாரண அந்த நீளம்தான் மார்பைச் சுற்றிய அளவாக இருக்கும். பிரான்சிஸ் அந்தக் கணக்கை மிகவும் விஞ்ஞானரீதியாகவே கணக்குப் போட்டு வைத்திருந்தான். ஆனால் பாப்பனின் மார்பின் சுற்றளவைத் தனியாக எடுக்கவில்லை. உடலின் நீளத்தையொட்டி அவன் அளவை அமைத்தான். ஆனால், பாப்பனின் இதயப் பகுதி சற்று பெரியதாக இருந்தது. அதனால்தான் அந்த சட்டைக்குள் நுழைய அவனுடைய இதயம் தயாராக இல்லை. சட்டையைச் சுருட்டி அந்த நீளமான மேஜைமீது எறிந்து கொண்டே பாப்பன் சொன்னான்வ: இது எனக்குத் தேவையில்லை. நீயே அணிந்துகொள்''.
பிரான்சிஸுக்கு ஒரு அடி கிடைத்ததைப்போல இருந்தது. அவனிடம் வேலை பார்ப்பவர்கள் திகைப்புடன் நின்று கொண்டி ருந்தார்கள்.
சட்டையில் இருக்கும் தவறைச் சொல்லுங்க. வெறுமனே கோபித்தால் போதுமா?'' பிரான்சிஸ் கேட்டான்.
நான் நினைத்தது...'' பாப்பன் சொன்னான்.
இப்படி சுருக்கங்கள் வைக்கப்பட்ட அரைக்கைச் சட்டை அல்ல. இதை அணிந்தால் என்னால் மூச்சு விட முடியாது. கைக்கு நீளம் வேண்டும். கழுத்துப் பகுதியில் சுருக்கம் தேவையில்லை.'' ஒன்றிரண்டு கேட்லாக்குகளைப் புரட்டிப் பார்த்து விட்டு பிரான்சிஸ் பாப்பனின் தவறைப் புரிந்து கொண்டு புன்சிரிப்புடன் சொன்னான்: நீங்கள் கூறுவது இங்கிலீஷ் மாடல். அது இயலாத விஷயம். உங்களுடைய உடலமைப்பிற்கு அது பொருத்தமாக இருக்காது. இது அமெரிக்கன் மாடல். இதுதான் உங்களுக்குச் சரியாக இருக்கும். நான் சட்டை தைக்க ஆரம்பித்து நாற்பது வருடங்கள் ஆகிவிட்டன.''
என்னுடைய மாடலை யார் தீர்மானம் செய்வது? நீங்களா நானா?'' பாப்பன் மரியாதையுடன் கேட்டான். அந்தக் கேள்விக்கு முன்னால் பிரான்சிஸின் தையல் கடை நடுங்கி விட்டது.
பிறகு... அதைத் தீர்மானிப்பது நீங்களா? உங்களுக்காக நான்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும். அப்படியென்றால் நீங்களே தைத்திருக்கலாமே?'' பிரான்சிஸ் அறிவுப்பூர்வமான கேள்வியை எழுப்பினான்.
ஆமாம்... நான்தான் என்னுடைய சட்டைக்கான மாதிரியைத் தீர்மானிக்க வேண்டும்.'' தைரியத்துடன் பாப்பன் சொன்னான்.
தான் விருப்பப்பட்ட சட்டையை அலங்கோலப்படுத்திய தையல்காரன்மீது எல்லையே இல்லாமல் எதிர்ப்பை வெளிப்படுத்த அவன் தயாரானான். ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றை- அது அமெரிக்கன் அல்ல, ஜெர்மன் மாடலாகவே இருந்தாலும் அவனைப் பொறுத்த வரையில் அதை வீசி எறிய வேண்டும்.
வெறுப்புடன் அவன் தையல்காரனைப் பார்த்தான்.
நான் என்னுடைய சட்டையை வாங்கிக் கொள்வேன். அதன் மாதிரியை நான்தான் முடிவு செய்வேன்.''
அது நீண்ட கால சிந்தனையாக மட்டுமே இருக்கும்.'' பண்டிதனான பிரான்சிஸ் சொன்னான்.
ஃபு!'' பாப்பன் கோபத்துடன் சொன்னான்.
சில சமாதான விரும்பிகள் இடையில் தலையிட்டார்கள். கைக்கு சற்று அதிகமான நீளத்தை வைத்து, அதைக் கொடுத்தால் பாப்பன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.
எனக்கு விருப்பமான சட்டையில் தேவையற்ற எந்தவொரு சுருக்கங்களும் தேவையில்லை.'' அவன் முடிவாகக் கூறினான்.
இரண்டாம் ஓணத்தின் வெளிச்சம் பாப்பனின் படுக்கைக்கு அருகில் வந்து நின்று வரவேற்று வாழ்த்து கூறியது. அவன் சட்டையை வாங்காமல் இருக்க முடியாது. அது அவனுடைய மிகவும் முக்கியமான தேவையாக ஆகிவிட்டது. அவன் தையல் கடைக்குச் சென்றான். தன்னுடைய சட்டைக்காக சமர்ப்பிப்பதற்கு விலை மதிப்புள்ள எதை ஒன்றை அவன் கொண்டு சென்றானோ, அது அவனுக்கு மிகவும் விருப்பமான உயிராக இருந்தது.
பாப்பன் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவே இல்லை. தன்னுடைய பலத்தைப் பற்றி அவனுக்கு தைரியக் குறைவும் இல்லை. ஆட்கள் ஓடி ஒன்று சேர்ந்தார்கள். பாப்பன் தையல் கடைக்குள் நுழைந்தான். பிரான்சிஸ் அமைதியாக தலையைக் குனிந்திருந்தான். அவனுடைய பணியாட்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். பாப்பன் தனக்கு விருப்பமான சட்டையைத் தேர்வு செய்து எடுத்தான். ஆட்கள் கைகளைத் தட்டினார்கள்.