அரிப்பு, அறவே போய்விடும்!
- Details
- Category: ஆரோக்கியம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6844
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
அடுத்து வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பால்ராஜ் கூறினார்:
“நான் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்பவன். என்ன காரணத்தாலோ சில நாட்களாக என்னுடைய முதுகில் திடீரென்று ஒருவித அரிப்பு உண்டானது. எந்த நேரமும் அரிப்பு இருந்துகொண்டே இருக்கும். நமைச்சல் தாங்கமுடியாமல் என் கையால் சொறிந்துவிடுவேன்.
அதன் விளைவாக சொறிந்த இடத்தில் தோல் தடிமனாகிவிடும். மீண்டும் அந்த இடத்தில் அதிகமான அரிப்பு உண்டாகும். என்னென்னவோ செய்து பார்த்தும், எந்தப் பயனும் ஏற்படவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது, எங்கள் தெருவில் குடியிருந்த ஒரு ஆட்டோ டிரைவர், ‘நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி தினமும் வாய் கொப்பளித்தால் அரிப்பு இருக்காது’ என்றார்.
ஒரு வாரம் நல்லெண்ணெய்யைக் கொப்பளித்து இருப்பேன். அதற்குள் என் முதுகில் இருந்த அரிப்பு படிப்படியாகக் குறைந்து நாளடைவில் முழுமையாகக் குணமாகிவிட்டது” என்று கூறினார்.