
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
அடுத்து ராமகிருஷ்ணன் என்ற 50 வயது நபர், தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’அனுபவத்தைக் கூறினார்:
“பல வருடங்களாக எனக்கு ஆஸ்துமா இருந்தது. ஒழுங்காக மூச்சுவிட முடியாது. அடிக்கடி மருத்துவரைப் போய் பார்ப்பேன். ஏதாவது ஊசியைப் போடுவார். மாத்திரைகள் தருவார். அந்த நேரத்துக்கு ஏதோ கொஞ்சம் குறையுமே தவிர, நிரந்தரமான பலனை தராது.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அது எந்த அளவுக்கு துன்பத்தைத் தரக்கூடியது என்பது தெரியும். மனக்கவலை உண்டாகிற அளவுக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு விட்டுக்கொண்டு இருப்பேன். நான் சத்தமாக மூச்சு விடுவதைப் பார்த்து, அருகில் இருக்கும் யாராக இருந்தாலும் ‘உங்களுக்கு ஆஸ்துமாவா?’ என்று கேட்பார்கள்.
பலருடன் பழகிப் பார்த்த பிறகுதான் எனக்கே தெரிந்தது ‘ஆஸ்துமா’ என்ற கொடிய நோய் பரவலாக இருக்கிறது என்ற உண்மை! சாதாரண நாட்களில் இருப்பதைவிட குளிர் காலம், மழைக் காலம் வந்துவிட்டால், ஆஸ்துமா தரும் தொல்லைகளை வார்த்தைகளால் கூறமுடியாது.
‘உஸ்... உஸ்...’ என்று மூச்சு விடும்போது, வெறுப்பும், கவலையும் உண்டாகும். இந்த ஆஸ்துமாவின் கொடுமையிலிருந்து எப்படி விடுதலை பெறுவது என்று தவியாகத் தவித்துக்கொண்டு இருந்தேன்.
இந்தச் சூழ்நிலையில் மார்க்கெட்டில் நான் சந்தித்த பெரியவர் ஒருவர், ‘நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளித்தால், நாளடைவில் ஆஸ்துமா முற்றிலும் குணமாகிவிடும்’என்று கூறினார். எனக்கு இருந்ததைப் போலவே, அவருக்கும் பல வருடங்களாக ஆஸ்துமா இருந்ததாகவும், மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமப்பட்டதாகவும், ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கூறியபடி நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளிக்க ஆரம்பித்தபிறகு, ஆஸ்துமா படிப்படியாகக் குறைந்து குணமாகிவிட்டது என்றும் அவர் கூறினார்.
அவர் கூறியபடி நானும் ‘ஆயில் புல்லிங்’செய்ய ஆரம்பித்தேன். இரண்டே மாதங்களில் முழு பலன். எத்தனையோ வருடங்களாக ஆஸ்துமாவின் தொல்லைகளில் சிக்கி அவதிப்பட்டுக்கொண்டு இருந்த எனக்கு, இப்போது ஆஸ்துமா கொஞ்சம்கூட இல்லை. முற்றிலுமாக அது என்னைவிட்டு ஓடிவிட்டது.
‘நோயை குணமாக்கும் அற்புத மருந்து நல்லெண்ணெய்’என்ற உண்மையை இப்போதாவது நான் உணர்ந்தேனே?” என்று தன்னைத்தானே ஆறுதல்படுத்திக் கொண்டார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook