விரால் மீன் குழம்பு
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 3277
விரால் மீன் குழம்பு
(Fish Curry)
தயாரிக்கும் நேரம் - 45 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
6 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• சுத்தம் செய்த விரால் மீன் துண்டுகள்- 1 கிலோ
• புளி - 1 எலுமிச்சை அளவு
• பெரிய வெங்காயம் - 1
• இஞ்சி - 1 அங்குலம்
• பூண்டு - 6 பல்
• தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
• மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
• மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
• சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி
• தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
• உப்பு - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 100 மில்லி லிட்டர்
செய்முறை :
புளியை ஊற வைத்து, கெட்டியாகக் கரைத்து, இத்துடன் மீன் துண்டுகள், உப்பு கலந்து முப்பது நிமிடங்கள் ஊற விடவும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
தனியாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள் இவற்றைத் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த வெங்காயக் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
அதன்பின் அரைத்த மசாலாவைப் போட்டு பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
தேங்காய்ப்பால் ஊற்றி, தேவைப்பட்டால், மேலும் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
குழம்பு கொணித்து, ஓரளவு கெட்டியானதும், ஊற வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு, மீன் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.