ஸோயா வறுவல்
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2029
ஸோயா வறுவல்
(Soya Fry)
தேவையான பொருட்கள் :
• ஸோயா உருண்டைகள் (Meal Maker) : 1 கப்
• இஞ்சி : 1 அங்குலம்
• பூண்டு : 6 பல்
• மிளகாய்தூள் : 1 தேக்கரண்டி
• சோள மாவு (Corn Flour) : 2 தேக்கரண்டி
• தக்காளி சாஸ் (Tomato Sauce) : 1 தேக்கரண்டி
• ஸோயா சாஸ் (Soya Sauce) : 1 தேக்கரண்டி
• கரம் மஸாலாதூள் : 1/2 தேக்கரண்டி
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 200 மி.லி.
செய்முறை :
தண்ணீரைக் கொதிக்க வைத்து ஸோயாவைப் போட்டு பத்து நிமிடங்கள் ஆனதும் இறக்கி வைக்கவும்.
ஆறியபின் ஸோயாவைப் பிழிந்து கொள்ளவும்.
மறுபடியும் குளிர்ந்த தண்ணீரில் போட்டு நன்றாக பிழிந்து எடுத்து வைக்கவும்.
ஸோயாவை இரண்டிரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும்.
ஸோயா துண்டுகளுடன், தக்காளி சாஸ், ஸோயா சாஸ், மிளகாய்தூள், கரம் மஸாலாதூள், சோள மாவு, தேவையான அளவு உப்புத்தூள், அரைத்து வைத்துள்ள இஞ்சி-பூண்டு இவற்றைக் கலந்து முப்பது நிமிடங்கள் ஊறவிடவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஊறவைத்துள்ள ஸோயா துண்டுகளை கொஞ்சம்,கொஞ்சமாகப் போட்டுப் பொரித்து (Deep Fry) எடுத்து உபயோகிக்கவும்.