சேப்பங்கிழங்கு வறுவல்
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2074
சேப்பங்கிழங்கு வறுவல்
(Yam Fry)
தேவையான பொருட்கள் :
• சேப்பங்கிழங்கு : 750 கிராம்
• துவரம்பருப்பு : 1 மேஜைக்கரண்டி
• பச்சரிசி : 1 மேஜைக்கரண்டி
• உளுத்தம்பருப்பு : 1 மேஜைக்கரண்டி
• மிளகாய்தூள் : 1 தேக்கரண்டி
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 300 மி.லி.
செய்முறை :
சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சரிசி இவற்றை நன்றாக வறுத்து நைஸாக தூளாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள சேப்பங்கிழங்கு துண்டுகளைப் போட்டுப் பொரித்து (Deep Fry) எடுக்கவும்.
வேறு வாணலியில் மூன்று மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொரித்து வைத்துள்ள சேப்பங்கிழங்குத் துண்டுகள், உப்புத்தூள், அரைத்த மஸாலா பொருட்கள், மிளகாய்தூள் இவற்றைப் போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாகக் கிளறி விடவும்.
சேப்பங்கிழங்கு துண்டுகள் சிவக்க வறுபட்டதும் இறக்கி உபயோகிக்கவும்.