உருளைக்கிழங்கு கார வறுவல்
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2125
உருளைக்கிழங்கு கார வறுவல்
(Potato Spicy Fry)
தேவையான பொருட்கள் :
• உருளைக்கிழங்கு : 500 கிராம்
• வடிகட்டிய தயிர் : 2 மேஜைக்கரண்டி
• க்ரீம் (Cream) : 2 மேஜைக்கரண்டி
• இஞ்சி : 2 அங்குலம்
• பூண்டு : 6 பல்
• கடலைமாவு : 3 தேக்கரண்டி
• ஆம்ச்சூர் பவுடர் (Amchur Powder) : 1 தேக்கரண்டி
• சீஸ் துறுவல் : 2 தேக்கரண்டி
• மிளகாய்தூள் : 1 தேக்கரண்டி
• கரம் மஸாலா தூள் : 1 தேக்கரண்டி
• சீரகத்தூள் : 1 தேக்கரண்டி
• கசூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) : சிறிதளவு
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 4 மேஜைக்கரண்டி
செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, வட்ட வடிவங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
சற்று பருமனான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தயிரை மெல்லிய துணியில் கட்டி தொங்க விட்டால் அதிலுள்ள தண்ணீர் இறங்கி, வடிகட்டிய தயிர் கிடைக்கும்.
கசூரி மேத்தியை துளாக்கிக் கொள்ளவும்.
கடலைமாவை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் ஒரு மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, இத்துடன் மிளகாய்தூளைக் கலந்து கொள்ளவும்.
இத்துடன் வடிகட்டிய தயிர், க்ரீம், அரைத்த இஞ்சி-பூண்டு கலவை, கரம் மஸாலாதூள், தூளாக்கிய கசூரி மேத்தி, ஆம்ச்சூர் பவுடர், சீரகத்தூள், வறுத்து வைத்துள்ள கடலைமாவு, உப்புத்தூள் இவற்றைக் கலந்து இந்தக் கலவையுடன் உருளைக்கிழங்கு வட்டங்களைப் போட்டுக் கிளறி முப்பது நிமிடங்கள் ஊறவிடவும்.
வாணலி அல்லது Non-Stick-Pan-ல் இரண்டு மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஊறவைத்துள்ள உருளைக்கிழங்கு வட்டங்களைப் போட்டு சிவக்க வதக்கவும்.
மிதமான தீயில் வைத்து மெதுவாகப் புரட்டிப் போட்டுக் கிளறுவதை நிறுத்தாமல் வதக்கி, இறக்கி உபயோகிக்கவும்.
உருளைக்கிழங்கு குழைந்துவிடாமல் வேக வைப்பது மிக அவசியம்.
(கசூரி மேத்தி என்றழைக்கப்படும் உலர்ந்த வெந்தயக்கீரை, டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்ஸ்-ல் (Departmental Stores) கிடைக்கின்றது.)