பச்சை மிளகாய் குழம்பு
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2507
பச்சை மிளகாய் குழம்பு
(Green Chilly Gravy)
தேவையான பொருட்கள் :
• பிஞ்சான பச்சை மிளகாய் : 250கிராம்
• சின்ன வெங்காயம் : 150 கிராம்
• புளி : எலுமிச்சை அளவு
• மஞ்சள்தூள் : 3 சிட்டிகை
• கருவேப்பிலை : சிறிது
• கடுகு : 1 தேக்கரண்டி
• வெந்தயம் : 1/2 தேக்கரண்டி
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 3 மேஜைக்கரண்டி
செய்முறை :
பச்சை மிளகாய்களை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை போட்டுத் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
வதங்கியபின் புளிக்கரைசலை ஊற்றவும்.
மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.
குழம்பு கெட்டியானதும் இறக்கி உபயோகிக்கவும்.
(இந்த மிளகாய் குழம்பை, ஊறுகாய் போல தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம். இட்லி, தோசைக்கும் ஏற்றது.)