கீரை ஃப்ரைட் ரைஸ்
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2072
கீரை ஃப்ரைட் ரைஸ்
(Greens Fried Rice)
தேவையான பொருட்கள் :
• வெந்தயக்கீரை : 2 கட்டு
• பாஸ்மதி அல்லது சீரகசம்பா அரிசி : 400 கிராம்
• மஞ்சள்தூள் : 3 சிட்டிகை
• கரம் மஸாலாதூள் : 1 தேக்கரண்டி
• பச்சை மிளகாய் : 5
• கேரட் : 2
• மிளகுத்தூள் : 1 தேக்கரண்டி
• பெரிய வெங்காயம் : 3
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 4 மேஜைக்கரண்டி
செய்முறை :
வெந்தயக்கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயின் விதைகளை எடுத்து விட்டு வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
சுத்தம் செய்து வைத்துள்ள வெந்தயக்கீரை, கேரட் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசியை இருபது நிமிடங்கள் ஊறவைத்து, தண்ணீரை வடிய வைத்துக் கொள்ளவும்.
அகன்ற வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி இதயம் ஊற்றி, காய்ந்ததும் அரிசியைப் போட்டு, மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த அரிசியை, தேவையான அளவு உப்பு சேர்த்து உதிரி உதிராக வேக வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
வேறு வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
இத்துடன் கேரட், கீரையைப் போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
கீரையும், கேரட்டும் நன்றாக வெந்து வதங்கியதும் வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு சில நிமிடங்கள் வறுக்கவும்.
வறுக்கும் பொழுது மிளகுத்தூள், கரம் மஸாலாதூள் தூவி வறுக்கவும். சில நிமிடங்கள் வறுத்தபின் இறக்கி உபயோகிக்கவும்.