வெஜிடபிள் தோசை
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2267
வெஜிடபிள் தோசை
(Vegetable Dhosai)
தேவையான பொருட்கள் :
• புழுங்கல் அரிசி (இட்லி அரிசி) : 300 கிராம்
• பச்சரிசி : 100 கிராம்
• கடலைப்பருப்பு : 100 கிராம்
• துவரம்பருப்பு : 100 கிராம்
• குடமிளகாய் : 1
• பீன்ஸ் : 50 கிராம்
• கேரட் : 100 கிராம்
• தேங்காய் : 6 மேஜைக்கரண்டி
• தக்காளி : 2
• சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லித் தழை : 2 மேஜைக்கரண்டி
• கருவேப்பிலை : சிறிது
• சிகப்பு மிளகாய் : 6
• சீரகம் : 1 தேக்கரண்டி
• இஞ்சி : 2 அங்குலம்
• பூண்டு : 6 பல்
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 10 மேஜைக்கரண்டி
செய்முறை :
புழுங்கலரிசி, பச்சரிசி, பருப்பு வகைகள் ஆகியவற்றை ஊற வைத்துக் கொள்ளவும்.
ஊறிய பிறகு தக்காளி, இஞ்சி, சிகப்பு மிளகாய், பூண்டு இவற்றை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு ஆட்டிக் கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
கேரட், பீன்ஸ், குடமிளகாய் (விதைகளை எடுத்து விட்டு) இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் காய்கறிகளை, உப்பு¸ சேர்த்து சில நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும்.
ஆட்டி வைத்துள்ள மாவுடன் தேங்காய்துறுவல், வதக்கி வைத்துள்ள குடமிளகாய், பீன்ஸ், கேரட், வெங்காயம், கொத்தமல்லித்தழை, கருவேப்பிலை ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லைக் காய வைத்து, மாவை ஊத்தப்பம் போல சற்று கனமாக ஊற்றவும்.
சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும். ஒரு பக்கம் சிவந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு எடுத்து உபயோகிக்கவும்.