ஸ்பெஷல் மஸாலா தோசை
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 1868
ஸ்பெஷல் மஸாலா தோசை
(Special Masala Dhosai)
தேவையான பொருட்கள் :
• புழுங்கல் அரிசி : 400 கிராம்
• பச்சரிசி : 200 கிராம்
• துவரம் பருப்பு : 100 கிராம்
• வெந்தயம் : 1 தேக்கரண்டி
• உளுத்தம் பருப்பு : 200 கிராம்
• உருளைக்கிழங்கு : 250 கிராம்
• பெரிய வெங்காயம் : 3
• தேங்காய்துறுவல் : 6 மேஜைக்கரண்டி
• பூண்டு : 6 பல்
• புளி : எலுமிச்சை அளவு
• கருவேப்பிலை : சிறிது
• மஞ்சள்தூள் : 3 சிட்டிகை
• மிளகாய்தூள் : 1 தேக்கரண்டி
• கடுகு : 1 தேக்கரண்டி
• பட்டை : 2 துண்டுகள்
• கிராம்பு : 3
• சோம்பு (பெருஞ்சீரகம்) : 1 தேக்கரண்டி
• உப்பு : தேவையானஅளவு
• இதயம் நல்லெண்ணெய் : 6 மேஜைக்கரண்டி
செய்முறை :
அரிசி வகைகளுடன் உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை காலையில் ஊறவைத்து மாலை நேரம் ஆட்டிக் கொள்ளவும்.
ஆட்டிய மாவுடன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
மறுநாள் காலையில் இந்த மாவை உபயோகித்து ஸ்பெஷல் மஸாலா தோசை தயாரிக்கலாம்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மசித்து வைக்கவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை போட்டுத் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி வேகவைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பூண்டை உரித்துக் கொள்ளவும். தேங்காய் துறுவலுடன் பூண்டு, மிளகாய்தூள், புளி, உப்பு சேர்த்து அரைத்து இந்தச் சட்னி கலவையைத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து தோசை மாவைப் பரவலாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
தோசை இளஞ்சிவப்பாக மாறி, வெந்ததும் சிறிதளவு சட்னி கலவையை தோசையின் மேல்பக்கம் முழுவதும் தடவி, உருளைக்கிழங்கு மஸாலாவை பரவலாகத் தடவி, தோசையைத் திருப்பாமல் அப்படியே மடித்து எடுத்து உபயோகிக்கவும்.
(சட்னிக்கு பதிலாக இட்லி பொடியை தோசை மீது பரவலாகத் தூவியும் தயாரிக்கலாம்.)