வெங்காய வறுவல்
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2193
வெங்காய வறுவல்
(Onion Fry)
தேவையான பொருட்கள் :
• சின்ன வெங்காயம் : 500 கிராம்
• பச்சை மிளகாய் : 3
• கடுகு : 1 தேக்கரண்டி
• மிளகாய்தூள் : 1 தேக்கரண்டி
• கருவேப்பிலை : சிறிது
• உப்பு : தேவையானஅளவு
• இதயம் நல்லெண்ணெய் : 3 மேஜைக்கரண்டி
செய்முறை : :
வெங்காயத்தை உரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை வட்டவட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டுத் தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு, மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
மிளகாய்தூள், உப்புத்தூள் போடவும்.
வெங்காயம் சிவக்க வதங்கியதும் இறக்கி உபயோகிவும்.
(தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஏற்றது. விருப்பப்பட்டால் வெங்காயத்துடன் தேங்காயை சிறு சிறு பற்களாக நறுக்கிப் போட்டு வதக்கி தயாரிக்கலாம்.)