மஸாலா வடை
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2108
மஸாலா வடை
(Masala Vadai)
தேவையான பொருட்கள் :
• கடலைப்பருப்பு : 400 கிராம்
• இஞ்சி : 2 அங்குலம்
• பூண்டு : 6 பல்
• பச்சைமிளகாய் : 3
• சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லித்தழை : 3 மேஜைக்கரண்டி
• சுத்தம் செய்து நறுக்கிய புதினா இலைகள் : 3 மேஜைக்கரண்டி
• பெரிய வெங்காயம் : 2
• கரம் மஸாலாதூள் : 1 தேக்கரண்டி
• சோம்பு (பெருஞ்சீரகம்) : 1 தேக்கரண்டி
• கருவேப்பிலை : சிறிது
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 300 மி.லி.
செய்முறை :
கடலைப்பருப்பை ஊற வைக்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா இவற்றை அரைத்து இத்துடன் கரம் மஸாலாதூள் கலந்து கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
கருவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும்.
ஆட்டிய மாவுடன் மஸாலா கலவை, வெங்காயம், கருவேப்பிலை, சோம்பு இவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறிதளவு மாவை எடுத்து வடை வடிவமாகத் தட்டி ஒரு முறைக்கு ஏழு அல்லது எட்டு வடைகளாகப் போட்டுப் (Deep fry) பொரித்து எடுத்து உபயோகிக்கவும்.