சீஸ் ரொட்டி
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2279
சீஸ் ரொட்டி
(Cheese Bread)
தேவையான பொருட்கள் :
• ரொட்டித் துண்டுகள் : 6
• சீஸ் ஸ்லைஸ் : 4
• முட்டை : 2
• பெரிய வெங்காயம் : 1
• பச்சை மிளகாய் : 4
• மைதா மாவு : 1 மேஜைக்கரண்டி
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 3 மேஜைக்கரண்டி
செய்முறை :
ரொட்டித் துண்டுகள் ஒவ்வொன்றையும் இரண்டு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
சீஸை துறுவலாக இழைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயில் விதையை எடுத்துவிட்டு வட்டவட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
முட்டையின் வெள்ளைக்கரு தனியாகவும், மஞ்சள்கரு தனியாகவும் பிரித்து, முட்டை அடிக்கும் கருவியால் தனித்தனியாக அடித்து வைக்கவும்.
அகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, உப்புத்தூள், பச்சை மிளகாய், சீஸ் துறுவல், அடித்து வைத்துள்ள வெள்ளைக்கரு, மஞ்சள்கரு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும்.
இக்கலவையை ரொட்டியின் ஒரு பக்கம் பரவலாகத் தடவவும்.
தோசைக்கல்லைக் காய வைத்து, சீஸ் கலவை தடவின பகுதி தோசைக்கல்லின் மீது படும்படி போட்டு, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
அடிப்பகுதி சிவந்ததும் திருப்பிப் போட்டு, மேல் பக்கமும் நன்றாக சிவந்ததும் தோசைக் கரண்டியால் எடுத்து உபயோகிக்கவும்.