Lekha Books

A+ A A-

இம்மானுவல் - Page 2

Immanuel

‘குவைத் குமாரன்’ என்றொரு ஆளை செயற்கையாக ‘செட் அப்’ பண்ணி இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வரும்படி செய்கிறான் இம்மானுவல். வந்திருக்கும் ஆள் ஒரு மிகப் பெரிய கோடீஸ்வரன் என்று நினைத்து, நிறுவனத்தின் மேலாளர் கற்பனைக் கோட்டையில் மிதக்கிறான்.

அதைத் தொடர்ந்து பல நல்ல காரியங்கள் நடக்கின்றன. இன்சூரன்ஸ் பணம் கிடைக்காமல் தினமும் நடந்து கொண்டிருந்த வயதான கிழவிக்கு பணம் கிடைக்கிறது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு, தலையிலிருந்த முடி முழுவதையும் இழந்து, நடைப் பிணமாக அலைந்து கொண்டிருந்த பெண்ணுக்கு மருத்துவச் செலவிற்கான பணம் கிடைத்து, நோய் நீங்கி, தன் மகனுடன் அவள் நலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஊழல்களுக்கு துணை போய்க் கொண்டிருந்த மருத்துவர் திருந்தி, மக்கள் சேவையில் இறங்குகிறார். இவை எல்லாமே நடந்ததற்கு காரணம் ஒரே ஒரு மனிதன்தான். அவன்- இம்மானுவல்!

தன்னை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல் பிறரையும் மனதில் நினைக்கும் அந்த கடவுள் நம்பிக்கை கொண்ட நல்ல மனிதன், ஒரு சூழ்நிலையில் தன்னை படாத பாடு படுத்திய, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளரின் வேலையே பறி போய் விடாமல் இருப்பதற்கும் உதவியாக இருக்கிறான். அப்போதுதான் தான் இதுவரை செய்த தவறுகளையும், பிறருக்கு இழைத்த துன்பங்களையும், தன்னால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் அவலக் கதைகளையும் நினைத்துப் பார்க்கிறான் அவன்.

தன் வாழ்க்கையையே காப்பாற்றிய இம்மானுவலைப் பார்த்து ‘நீங்கள்தான் என் ஹீரோ! ’ என்கிறான் பெருமையுடன். அந்த நிறுவனத்தில் பல மாறுதல்கள் உண்டாக மூல காரணமாக இருந்து, நிறுவனத்தின் போக்கையே சீரான நிலைக்கு திருப்பி விட்ட கதாநாயகனான இம்மானுவலையே ஆச்சரியத்துடனும், பெருமையுடனும் பார்க்கின்றனர் அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும்.

அவர்களுக்கு மத்தியில் கம்பீரமாக நடந்து வருகிறான் இம்மானுவல்.

அந்த நிறுவனத்தில் தான் பார்த்த வேலையை விட்டு விடுகிறான் இம்மானுவல். காரணம் கேட்ட மனைவியிடம் ‘அந்த வேலை எனக்கு ஏற்றதல்ல’ என்கிறான் அவன். சொந்தத்தில் ஒரு அழகான வீட்டைக் கட்ட வேண்டும் என்பது அவளுருடைய ஆசை. மரங்களும் செடிகளும் சூழ்ந்த அந்த இல்லத்தில் சொகுசாக வாழ வேண்டும் என்பது அவர்களின் மகனின் கனவு. அது நிறைவேறாமல் போய் விட்டதே என்ற கவலை மனதிற்குள் இருந்தாலும், கணவனைப் பார்த்து புன்னகைக்கிறாள் அந்த அருமையான மனைவி. மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்! அந்த வரத்தைப் பெற்றவன் அவன்!

தன்னை நம்பியிருக்கும் அந்த நல்ல மனிதனை அவன் வணங்கும் கடவுள் கை விடுவாரா? முன்பு அவன் பணி செய்த பதிப்பகத்தின் உரிமையாளர் மீண்டும் அவனை வந்து பார்க்கிறார். வட இந்தியாவிற்குச் சென்று நிறைய பணம் சம்பாதித்த அவர், அவனுக்குச் சேர வேண்டிய மீதி சம்பளப் பணத்தைக் கொண்டு வந்து தருகிறார். அதைத் தொடர்ந்து, அவரின் அந்த பதிப்பகம் திரும்பவும் செயல்பட ஆரம்பிக்கிறது. முன்பு மாதிரி அல்ல- பெரிய ‘கார்ப்பரேட்’ லெவலில். அங்கு மீண்டும் பணியில் சேர்கிறான் இம்மானுவல்.

அவனுக்கென்று ஒரு அறை. அதில் மிடுக்காக அமர்ந்திருக்கிறான் இம்மானுவல். அவனுடைய வாழ்க்கை தொடர்கிறது... கனவுகளும்... வெகு சீக்கிரமே அவன் சொந்தத்தில் வீடு கட்டுவான். அதில் மனைவியையும் மகனையும் சந்தோஷமாக வைத்திருப்பான். அவர்களுடன் சேர்ந்து அவன் வாழ்க்கையைக் கொண்டாடுவான். அதற்கான ஆயத்தங்களில் இப்போதே இறங்கி விட்டான் இம்மானுவல்.

நல்ல மனிதனுக்கு நல்லதுதான் நடக்கும். அதற்கு உதாரணம்- இம்மானுவலும், அவனுடைய வாழ்க்கையும்.

இம்மானுவலாக வாழ்ந்திருப்பவர் - மம்மூட்டி. இந்தப் பாத்திரத்திற்கு இவரைத் தவிர, வேறு யாருமே பொருத்தமாக இருக்க மாட்டார்கள். பாத்திரத்திற்கு நூறு சதவிகிதம் உயிர் தந்து, திறமையின் உச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் மம்மூட்டி.

மம்மூட்டியின் மனைவியாக ரீனு மேத்யூஸ் என்ற புதுமுக நடிகை! இவரா புதுமுகம்! கூறினால், யாருமே நம்ப மாட்டார்கள். என்ன அருமையாக நடித்திருக்கிறார்! நல்ல எதிர்காலம் இவருக்கு இருக்கிறது. மம்மூட்டியின் மகனாக நடித்திருக்கும் சிறுவனிடம்தான் என்ன அபார திறமை! சர்வ சாதாரணமாக அவன் வசனம் பேசி நடிக்கும்போது, நமக்கே அவன் மீது ஆச்சரியம் உண்டாகிறது.

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் ஜீவன் ராஜாக-ஃபகத் ஃபாஸில். அட்டகாசமான நடிப்பு!. முத்திரை பதித்திருக்கிறார். அனாயாசமான நடிப்பு வெளிப்பாடு!

இன்சூரன்ஸ் பணத்திற்காக அலையும் அவயதான பெண்ணாக- சுகுமாரி.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பரிதாபத்திற்குரிய பெண்ணாக - முக்தா.

முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில்- நெடுமுடி வேணு.

மம்மூட்டிக்கு உதவும் ராஜசேகரனாக- முகேஷ்.

‘குவைத் குமாரனாக’-  தேவன்.

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ப்யூனாக- சலீம் குமார்.

இசை - Afzal Yusuf

ஒளிப்பதிவு - ப்ரதீப் நாயர்

படத் தொகுப்பு - ரஞ்சன் ஆப்ராஹம்.

மூவரும் தங்களின் பணிகளைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

நல்ல படங்கள் எப்போதாவதுதான் வரும். அத்தகைய ஒரு படம்- ‘இம்மானுவல். ’

லால் ஜோஸின் கலையுலகப் பயணத்தில் இன்னொரு சாதனைக் கல் - இந்தப் படம்.

ஒரு தரமான படத்தை நேர்த்தியாக இயக்கி, அளித்த சீரிய முயற்சிக்காக... Mr.Lal Jose, Please give your hands... I want to kiss.­

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel