Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

15 பார்க் அவென்யூ

15 Park Avenue

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

15 Park Avenue

(இந்திய ஆங்கில திரைப்படம்)

பர்ணா சென் இயக்கிய ஒரு மாறுபட்ட கதைக் கருவைக் கொண்ட குறிப்பிடத்தக்க திரைப்படம்.

2005ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் அந்த ஆண்டின் ‘இந்தியாவில் உருவான சிறந்த ஆங்கிலப் படம்’ என்பதற்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறது.

Schizophrenia என்ற நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. கதையை அபர்ணா சென்னே எழுதியிருக்கிறார்.

மிட்டாலி என்ற மீத்தி Schizophreniaவால் பாதிக்கப்பட்டவள்.

அவளுக்கு ஒரு அக்கா. அவளின் பெயர் அஞ்சலி. அனு என்று எல்லோரும் அவளை அழைப்பார்கள். அனுவிற்கும் மீத்திக்கும் வயது வித்தியாசம் மிகவும் அதிகம். அவர்களின் அன்னையும் உயிருடன் இருக்கிறாள். அவளின் வயது அதிகம். மீத்தியை ஒரு சிறு குழந்தையைப் போல கவனம் செலுத்தி பார்த்துக் கொள்கின்றனர் அனுவும், அவளின் தாயும். மீத்தி, தன் தாயின் இரண்டாவது கணவருக்கு மகளாக பிறந்தவள். எனினும், அனு அவளின் மீது உயிரையே வைத்திருக்கிறாள். அவளுக்கு ஒரு சிறிய கீறல் உண்டானாலும், அதை அனுவால் தாங்கிக் கொள்ள முடியாது. எச்சிலை ஒழுக விட்டுக் கொண்டு பேசும், சாப்பிடும் உணவு உதட்டுக்கு வெளியே வருவது மாதிரி சாப்பிடும் மீத்தியின் செயல்களை மிகவும் ரசித்துப் பார்ப்பாள் அனு.

30 வயதை எட்டி விட்ட மீத்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனினும், தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி விட்டது என்றும், தனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றன என்றும் அவள் தன் மனதில் ஒரு கற்பனை கோட்டையைக் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

கொல்கத்தா நகரத்தில் 15 பார்க் அவென்யூ என்ற முகவரியில் தனக்கு ஒரு, வீடு இருக்கிறது என்றும், அங்குதான் தன்னுடைய கணவனும் ஐந்து குழந்தைகளும் இருக்கிறார்கள் என்றும் மீத்தி கூறுகிறாள். தன் கணவனையும், குழந்தைகளையும் பார்க்க விடாமல் தன்னை வீட்டிற்குள்ளேயே சுதந்திரம் தராமல் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று அவள் தன் அக்கா அனுவையும், வயதான தாயையும் குற்றம் சுமத்துகிறாள். அவர்கள் என்னதான் விளக்கம் கூறினாலும், அதை ஏற்றுக் கொள்ள அவள் தயாராக இல்லை. திரும்பத் திரும்ப அவர்களின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறாள். தாங்க முடியாத அளவிற்கு கோபத்தை வெளிப்படுத்துகிறாள்.

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே மீத்தியின் அக்கா அனு காரை ஓட்ட, அருகில் மீத்தி உட்கார்ந்திருக்க, ஒவ்வொரு தெருவாக இருவரும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். கண்ணில் படுபவர்களிடமெல்லாம் ‘பார்க் அவென்யூ எங்கே இருக்கிறது?’ என்று கேட்கிறாள் மீத்தி. அப்படி ஒரு அவென்யூவே அங்கு இல்லை என்கின்றனர் எல்லோரும். உண்மையிலேயே அப்படியொரு இடமே இல்லை. மீத்தி தன் மனதில் கற்பனையாக நினைத்துக் கொண்டிருக்கும் இடம், உண்மையில் எங்கிருந்து வரும்?

கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றும் அனு ‘எனக்காக வகுப்பில் மாணவர்களும் மாணவிகளும் காத்திருப்பார்கள். நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம்’ என்று காரைத் திருப்ப, அதற்காக மிகவும் மனம் நொந்து கவலைப்படுகிறாள் மீத்தி.

அனுவிற்கும் அவளுடன் பணியாற்றும் போராசிரியர் ஒருவருக்குமிடையே ஒரு புரிதல் கொண்ட நட்பு இருக்கிறது. ஆனால், மீத்திக்காக தன்னுடைய சொந்த வாழ்க்கையைக் கூட பெரிதாக எண்ணாமல், எல்லாவற்றையும் தள்ளிப் போட்டு விட்டு, வயதை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கிறாள் அனு.

மீத்தியின் உடல் நிலையில் தீவிர கவனம் செலுத்துகிறார் புதிய டாக்டரான குணால் பருவா. சிறு வயதிலிருந்தே Schizophreniaவிற்கான அறிகுறிகள் இருந்தாலும், 20 வயது வரை சாதாரண பெண்களைப் போலவே மீத்தியும் இருந்து வந்திருக்கிறாள் என்று டாக்டரிடம் கூறுகிறாள் அனு. ஆனால். பத்திரிகை ரிப்போர்ட்டராக பணி புரிந்த காலத்தில் நடைபெற்ற ஒரு கொடூர சம்பவத்திற்குப் பிறகுதான், மீத்தியின் வாழ்க்கையே திசை மாறிப் போகிறது. அதற்குப் பிறகுதான் அவள் மற்றவர்களிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டு, தனக்கென்று ஒரு உலகத்தைப் படைத்துக் கொண்டு கற்பனை உலகத்தில் வாழ ஆரம்பிக்கிறாள்.

தான் ‘ஜர்னலிஸ்ட்’ ஆக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவள் ஒரு அறையில் தங்கியிருக்க, தனிமையில் இருக்கும் அந்த கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் அமர்ந்திருந்த ரவுடிகள் சிலர் அவளின் கற்பைச் சூறையாடி, இரத்தம் வழிய அவளை வெளியே போட்டு விட்டு போய் விடுகின்றனர். சுய உணர்வு இல்லாமல், மயங்கிக் கிடந்த அவளைத் தூக்கிக் கொண்டு வந்து மருத்துவமனையில் கவனமாகப் பார்த்துக் கொண்டவளே அனுதான்.

அந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு அவளுக்கும் ஜாய் தீப் என்ற இளைஞனுக்கும்  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. அரசியல் பின்புலம் கொண்ட சமூக விரோதிகளால் கற்பழிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கையிலிருந்து விலகி, கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மீத்தியுடன் நடத்திய திருமண நிச்சயதார்த்தத்தை ரத்து செய்து விடுகிறான் ஜாய்தீப்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version