மரணத்திற்குப் பிறகு - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4529
சிதைக்கு நல்ல விறகு பயன்படுத்தப்பட்டிருந்தது. பச்சை மாமரம்... நல்ல ஓரங்களும் இருந்தன. பெரிய நெருப்புக் கட்டைகள் நின்று நின்று எரிந்தன, புகைந்து கொண்டிருந்தன. நெஞ்சுப் பகுதியில் நெருப்புக் கட்டைகள் அதிகமாக மின்னின. மனைவி மயக்கத்தில் இருந்தாள்.
மறுநாள் காலையில் அனைத்தும் அணைந்து அடங்கி, சிதை ஒரு சாம்பல் குழியாக ஆனது. மனைவி கண் விழித்தாள். அவளால் எழுந்து நிற்க முடிந்தது. நேராக தெற்கு பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவள் நடந்தாள். நிலத்தின் தென் கிழக்கு மூலையில் இருந்த சாம்பல் குழியை அவள் பார்த்தாள். சற்று பார்த்து விட்டு, சிறிது சிறிதாக அவள் மயங்கி விட்டாள்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏதோ உணவைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அவள் நீரை மட்டும் குடித்தாள். அவள் வீட்டிற்குள் சற்று நடந்தாள். முகத்தைக் கழுவ பயன்படும் சொம்பைக் காணவில்லை. பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் சொன்னாள்: 'இறுதி சடங்கைச் செய்வதற்காக அந்த சொம்பை எடுத்துச் சென்றார்கள்.' அப்போது மனைவி கேட்டாள்: 'யார் எடுத்துட்டுப் போனாங்க?'
'யாரோ எடுத்துக் கொண்டு போவதைப் பார்த்தேன்.'
அதற்குப் பிறகுதான் மேற்குப் பகுதியில் நின்றிருந்த மாமரத்தை வெட்டிய விஷயம் மனைவிக்குத் தெரிய வந்தது.
'டேய், துரோகி... இந்த நேரத்தில் நீ அதையும் எடுத்துக் கொண்டாயா?' -- மனைவிக்கு கோபம் வந்தது. அவளுக்கு வெறி ஏறியது. 'இந்த காரியத்திற்காக உனக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன்' -- மனைவி சொன்னாள்.
அன்றே அவர்களுக்கிடையே பலமான சண்டை நடந்தது. சோர்வடைந்து காணப்பட்ட மனைவி, ஒரு ஆணுடனும் அவருடைய மனைவியுடனும் நாக்கைக் கொண்டு சண்டை போட்டாள். மறுநாள் -- மொத்தத்தில் ஒரு காவல் துறை வழக்காகவும் அது ஆனது.
இப்போது அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மனைவி கடுமையான பிடிவாதத்தில் இருக்கிறாள்.