யானைக்கும் அடி சறுக்கும் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10411
படிச்சுதானே பத்திரிகைக்குத் தேர்ந்தெடுக்கிறா? அப்படி யாரோ எழுதி அனுப்பின கதையில இப்பிடி ஒரு தற்கொலை பத்தின கடிதம் வந்திருக்கு. கதையோட கடிதப் பக்கம் மட்டும் ஃபைல்ல இருந்து கீழே விழுந்திருக்கணும். அதை எடுத்து நளினி படிச்சிருக்கணும். ஸ்ரீராமைப் பிரிஞ்சு தவிச்சிக்கிட்டிருந்ததுனாலயும், சூழ்நிலை அதுக்கேத்த மாதிரி இருந்ததுனாலயும் நளினி, இந்த லெட்டரை எழுதினது ஸ்ரீராம்னு நினைச்சுட்டா. இதுதான் நடந்திருக்கணும்." மூர்த்தி விளக்கியதும் அனைவருக்கும் உண்மை புரிந்தது.
"மெத்தப் படிச்ச மேதாவியா இருந்தாலும், பாசம், அன்பு, குடும்ப நேயம்னு வர்றப்ப அந்தக் கடிதத்துல இருக்கற கையெழுத்து கூட தன் புருஷனோடது இல்லைன்னு தெரியாம மனசு பதறிப் போனா பாருங்க. அதுதான் பெண்மையோட இயல்பு. அங்க பாருங்க மூர்த்தி அண்ணா, சேர்ந்து வாழவே மாட்டேன்னு அடம் பிடிச்சவ, இப்ப மாப்பிள்ளையோட கையை இறுகப் பிடிச்சிக்கிட்டா." கௌரி சொன்னதைக் கேட்டு அனைவரும் சந்தோஷமாக சிரித்தனர்.