
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
நல்லெண்ணெய்யின் சிறப்பைப் பற்றி கூறுவதற்காக அடுத்து வந்தவர் பெயர் தனலட்சுமி. சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர். அவர் கூறிய அனுபவம் புதுமையாக இருந்தது:
“சில மாதங்களாக எனக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்து வந்தது. அதனால், அடிக்கடி மயக்கம் வந்துவிடும். எப்போது இயல்பாக இருப்பேன், எப்போது மயங்கி விழுவேன் என்று எனக்கே தெரியாது.
அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கும்போதே, திடீரென்று மயக்கமடைந்து மேஜையில் சாய்ந்துவிடுவேன். உடன் வேலை செய்பவர்கள் சுற்றி குழுமி நின்று, என்னை பரிதாபமாக பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.
இது அவ்வப்போது வீட்டிலும் அலுவலகத்திலும் மாறிமாறி நடக்கக்கூடிய தொடர் நடவடிக்கையாக இருந்தது. அவசர அவசரமாக ஏதாவது முதலுதவியைச் செய்வார்கள். சில நிமிடங்கள் கழித்து நான் விழிப்பேன். என்னைச் சுற்றி ஆட்கள் சோகத்துடன் நின்றுகொண்டு இருப்பதைப் பார்க்கும்போது, எனக்கு என்னவோ போல் இருக்கும்.
பிறருக்கு காட்சிப் பொருளாக நான் இருக்கிறேனே என்று நினைத்து மனதுக்குள் மிகுந்த வருத்தம் உண்டாகும்.
இந்த நிலையிலிருந்து எப்படி விடுபடுவது என்பதைப் பற்றி பலரிடமும் ஆலோசனை கேட்டேன். அப்போது தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் என்னுடைய நெருங்கிய தோழி ஒருத்தியை எதிர்பாராமல் சந்திக்க நேரிட்டது. அவள்தான் நல்லெண்ணெய்யின் சிறப்பைப் பற்றி எனக்கு எடுத்து கூறினாள்: ‘தினமும் காலையில் நல்லெண்ணெய்யில் ‘ஆயில் புல்லிங்’பண்ணினால் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு உடல் நலனில் முன்னேற்றம் உண்டாகும்’ என்று கூறினாள்.
அவள் கூறியபிறகு, நல்லெண்ணெய் வாங்கி, கொப்பளிக்கத் தொடங்கினேன். தினமும் பத்து நிமிடங்கள் நல்லெண்ணெய் என் வாய்க்குள் இருக்கும். இப்படியே ஒருமாத காலம் ஒரு நாளும் விடாமல் நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்தேன். ஒரு மாதத்துக்குப் பிறகு... நான் சொன்னால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். என்னுடைய ரத்த அழுத்தம் சீராகிவிட்டது.”
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook