
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா (Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
தாம்பரத்திலிருந்து வந்திருந்த சகுந்தலா என்ற பெண் தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’ அனுபவத்தைப் பற்றிக் கூறினார்:
“பல மாதங்களாக நான் கண் எரிச்சலால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தேன். மருந்துக் கடைகளில் விற்கும் பல ‘Eye Drop’-களை வாங்கி பயன்படுத்தினேன்.
அவற்றால் கண்களில் இருக்கக்கூடிய எரிச்சலை முழுமையாகக் குணப்படுத்த முடியவில்லை.
என்ன செய்வது என்று தெரியாமல், பல நேரங்களில் விரல்களால் கண்களைக் கசக்கிவிடுவேன். அதனால், கண்கள் சிவந்துபோய் பார்ப்பவர்களை எல்லாம் பயமுறுத்தும். எல்லோரும் ‘ஏன் கண்கள் இப்படி சிவந்து இருக்கின்றன?’ என்று கேட்க ஆரம்பித்தார்கள்.
இந்தக் கண் எரிச்சலை எப்படி குணப்படுத்துவது என்று தவித்துக்கொண்டு இருந்த சூழ்நிலையில்தான், எங்கள் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர், ‘ஆயில் புல்லிங்’ பற்றி கூறினார். அவர் சொன்னதிலிருந்து, தினமும் இரண்டு முறை நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிக்கத் தொடங்கினேன்.
தொடர்ந்து பத்து நாட்கள் செய்தபிறகு, நானே ஆச்சரியப்படும்படி என் உடல் நிலையில் மாற்றம் நிகழ்ந்தது. பல மாதங்களாக என்னைப் பாடாகப் படுத்திக்கொண்டு இருந்த கண் எரிச்சல் இருந்த இடம் தெரியாமல் மறைந்தேவிட்டது.
அதுமட்டும் இல்லாமல், முன்பு இருந்ததைவிட, இப்போது கண் பார்வையும் மிகத் தெளிவாக இருக்கிறது. புத்தகங்கள் படிக்கும்போது, கண்ணாடி போட்டு படித்து வந்த எனக்கு, இப்போது கண்ணாடி இல்லாமலேயே ஈஸியாக படிக்க முடிகிறது.
பல மருந்துகளால் குணப்படுத்த முடியாத கண் எரிச்சலை ‘நல்லெண்ணெய்யைக் கொப்பளித்ததால்’ குணமாகி இருப்பதை நினைக்கும்போது உண்மையிலேயே எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது” என்று முடித்தார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook