புளிக்கத்தரிக்காய்
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2029
புளிக்கத்தரிக்காய்
(Brinjal in Tamarind)
தேவையான பொருட்கள் :
• கத்தரிக்காய் : 200 கிராம்
• புளி : 1 கோலி அளவு
• கருவேப்பிலை : சிறிது
• கடலைப்பருப்பு : 1 தேக்கரண்டி
• சிகப்பு மிளகாய் : 4
• மஞ்சள்தூள் : 4 சிட்டிகை
• கடுகு : 1 தேக்கரண்டி
• தனியா : 2 தேக்கரண்டி
• சீரகம் : தேவையான அளவு
• உப்பு : தேவையானஅளவு
• இதயம் நல்லெண்ணெய் : 1 மேஜைக்கரண்டி
செய்முறை :
கத்தரிக்காயை சுத்தம் செய்து, நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
தனியா, சீரகம், சிகப்பு மிளகாய், கடலைப்பருப்பு இவற்றை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயுடன் புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டுத் தாளித்து தூளாக்கியுள்ள பொருட்களைப் போடவும்.
இத்துடன் வேகவைத்துள்ள கத்தரிக்காயைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கி உபயோகிக்கவும்.