தக்காளி சாம்பார்
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2164
தக்காளி சாம்பார்
(Tomato Sambar)
தேவையான பொருட்கள் :
• துவரம்பருப்பு : 200 கிராம்
• தக்காளி : 6
• சின்ன வெங்காயம் : 15
• பச்சை மிளகாய் : 4
• எலுமிச்சைசாறு : 2 தேக்கரண்டி
• கருவேப்பிலை : சிறிது
• சிகப்பு மிளகாய் : 2
• கடுகு : 1 தேக்கரண்டி
• மிளகு : 1 தேக்கரண்டி
• வெந்தயம் : 1/2 தேக்கரண்டி
• சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லித்தழை : 1 மேஜைக்கரண்டி
• இதயம் நல்லெண்ணெய் : 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் (Pressure Cooker) வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை உரித்து முழுதாக வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
வாணலி அல்லது கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், மிளகு, கருவேப்பிலை, சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து இத்துடன் வெங்காயம், தக்காளி இவற்றைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் வேக வைத்துள்ள துவரம்பருப்பை ஊற்றவும்.
இத்துடன் சாம்பார்தூள், உப்பு, இவற்றைப் போட்டுக் கிளறவும்.
சாம்பார் பக்குவம் ஆனதும் எலுமிச்சைசாறு ஊற்றி, கொத்தமல்லித்தழை போட்டு இறக்கி உபயோகிக்கவும்.
எலுமிச்சைசாறு குறைவாக இருந்தால் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.