ரவா குழிபணியாரம்
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2755
ரவா குழிபணியாரம்
(Rava Paniyaram Sweet)
தேவையான பொருட்கள் :
• வெள்ளை ரவை : 200 கிராம்
• தேங்காய்துறுவல் : 6 மேஜைக்கரண்டி
• ஏலக்காய் பொடி : 1/2 தேக்கரண்டி
• சர்க்கரை அல்லது கல்கண்டு : 1 1/4 டம்ளர்
• கிஸ்மிஸ் : 2 மேஜைக்கரண்டி
• மில்க் மெய்ட் : 1/2 டம்ளர்
• உப்புத்தூள் : 1 சிட்டிகை
• இதயம் நல்லெண்ணெய் : 100 மி.லி.
செய்முறை :
தேங்காய்துறுவலில் கெட்டியான பால் ஒரு டம்ளர் எடுத்துக் கொள்ளவும்.
கல்கண்டு பயன்படுத்தி தயாரிப்பதாக இருந்தால் கல்கண்டை தூளாக்கிக் கொள்ளவும்.
ரவையுடன் உப்புத்தூள், தேங்காய்பால், கல்கண்டு அல்லது சர்க்கரை, ஏலக்காய்தூள், மில்க் மெய்ட் இவற்றைக் கலந்து முப்பது நிமிடங்கள் ஊறவிடவும்.
சர்க்கரை கரைந்த பிறகு இந்தக் கலவை, தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.
அதிக தண்ணீர் ஊற்றி விடக்கூடாது. கிஸ்மிஸ்ஸை ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
குழிப்பணியாரச் சட்டியின் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, லேஸாக காய்ந்ததும் ரவை கலவையை சிறிதளவு ஊற்றி இதன்மீது கிஸ்மிஸ்ஸைப் பரவலாகத் தூவி, மேலும் சிறிதளவு ரவை கலவையை கிஸ்மிஸ் மீது ஊற்றவும். மறுபடியும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
மிதமான தீயில் வைத்து ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிவிட்டு எடுத்து உபயோகிக்கவும்.