Lekha Books

A+ A A-

ஏ செப்பரேஷன்

A Separation

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

ஏ செப்பரேஷன் - A Separation

(ஈரானிய திரைப்படம்)

2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, உலகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம்- 'A Separation'.

பாரசீக மொழியில் எடுக்கப்பட்ட இப்படம் 123 நிமிடங்கள் ஓடக் கூடியது.

நகரத்தில் வாழக் கூடிய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் வாழ்க்கையில் இனிமேல் சேர்ந்து வாழ்வதற்கான வழியில்லை, விவாகரத்து செய்து தனித் தனியாக வாழ்வதே சாலச் சிறந்தது என்ற முடிவிற்கு ஏன் வருகிறார்கள் என்பதை ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், உயிரோட்டத்துடனும் கூறும் ஒரு அருமையான படமிது.

திரைக்கு வந்து, சில மாதங்களிலேயே நான் இப்படத்தைப் பார்த்து விட்டேன். இப்போதும் என் மனதில் அப்படத்தின் கதையும், உணர்ச்சிமயமான உரையாடல்களும், யதார்த்தமான காட்சிகளும், கலைஞர்களின் அருமையான நடிப்பும், தொழில் நுட்பக் கலைஞர்களின் மிகச் சிறந்த பங்களிப்பும் திரும்பத் திரும்ப ஞாபகத்தில் வந்து கொண்டே இருக்கின்றன.

Asghar Farhadi இயக்கிய படமிது. படத்தின் கதையை எழுதியவரும் அவரேதான். 'About Elly' என்ற படத்தை இயக்கியதன் மூலம் நல்ல ஒரு பெயரை மக்களிடம் சம்பாதித்திருந்த அவர் 'A Separation' திரைப்படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்படும் இயக்குநராக ஆகி விட்டார்.

2012ஆம் ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு மொழி படம் (Best Foreign Language Film) என்ற பிரிவில் Academy Award (ஆஸ்கார்)ஐத் தட்டிச் சென்றது 'A Separation'. இந்த விருதைப் பெற்ற முதல் ஈரானிய படமே இதுதான். 61வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான 'Golden Bear' விருது இப்படத்திற்கு கிடைத்தது. இந்த விருதைப் பெற்ற முதல் ஈரானிய படமே இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை Peyman Moaadiயும், சிறந்த நடிகருக்கான விருதை Leila Hatamiயும் பெற்றனர். அவர்களுக்கு 'Silver Bears' விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த Foreign Language Filmக்கான பிரிவில் 'A Separation' திரைப்படம், 'Gold Globe' விருதையும் அள்ளிச் சென்றது.

Durban International Film Festivalஇல் 'Best Foreign Language Film' என்ற விருதைப் பெற்றது 'A Separation.'

இந்தியாவில் நடைபெற்ற 'International Film Festival' இல் Asghar Farhadiக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது.

இதைப் போல உலகமெங்கும் நடைபெற்ற இன்னும் பல திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் பரிசுகளை அள்ளிச் சென்றிருக்கிறது. படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ஆஹா ஓஹோ என்று பாராட்டி விமர்சனம் எழுதியிருக்கின்றனர். 'குடும்ப உறவுகளை சமீப காலத்தில் 'ஏ செப்பரேஷன்' திரைப்படம் அளவிற்கு ஆழமாக அலசிய படம் வேறொன்றில்லை' என்று எல்லோரும் எழுதினர்.

பத்திரிகைகளாலும், விமர்சகர்களாலும், திரைப்பட ரசிகர்களாலும் மிகச் சிறந்த படம் என்று ஒரே மனதுடன் கூறப்படும் 'ஏ செப்பரேஷன்' படத்தின் கதைதான் என்ன? ஆர்வமாக இருக்கும் உங்களுக்காக இதோ....

Nader என்ற ஆண், Simin என்ற பெண்ணை திருமணம் செய்து 14 வருடங்கள் ஆகி விட்டன. அவர்களுக்கு Termeh என்ற 11 வயது மகள் இருக்கிறாள். டெஹ்ரானில் அவர்கள் வாழ்கிறார்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து வாழ்வது என்ற நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் தன் கணவனுடனும், மகளுடனும் அந்த நாட்டை விட்டு வேறு எங்காவது போய் விட வேண்டும் என்றுதான் நினைத்தாள் சிமின். இப்போது நிலவிக் கொண்டிருக்கும் சூழலில் தங்களின் அன்பு மகள் டெர்மெஹ் வளர்வதை சிமின் விரும்பவில்லை. ஆனால், அவளுடைய விருப்பத்தை அவளுடைய கணவன் ஏற்றுக் கொள்ளவில்லை. நாடெர் அதற்கு மறுத்து விடுகிறான். அவன் தன் அன்பு தந்தையைப் பற்றி நினைத்துப் பார்க்கிறான். அந்த வயதான தந்தையும் அவர்களுடன்தான் வசிக்கிறார். அவருக்கு நினைவாற்றல் இழப்பு என்ற 'Alzheimer' நோய் இருக்கிறது. நாடெர் ஈரானில்தான் தொடர்ந்து வசிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்க, அவனை விவாகரத்து செய்து விடலாம் என்ற முடிவிற்கு வருகிறாள் சிமின். அதற்காக மனுவும் போடுகிறாள்.

குடும்ப நல நீதிமன்றம் அந்த தம்பதிகளின் பிரச்சினையைக் காது கொடுத்து கேட்கிறது. ஆனால், விவாகரத்து வழங்கக் கூடிய அளவிற்கு காரணங்கள் பலமானவையாக இல்லை என்று நினைக்கும் நீதிமன்றம் சிமினின் மனுவை நிராகரித்து விடுகிறது. ஆனால், சிமின் தன் கணவனையும் மகளையும் விட்டு விட்டு, தன் பெற்றோருடன் அங்கிருந்து கிளம்புகிறாள். தன் மனைவியின் சிபாரிசை வைத்து, நாடெர், Razieh என்ற ஏழை இளம் பெண்ணை, தன் தந்தையை தான் வங்கிக்கு வேலைக்குச் சென்றிருக்கிற வேளையில் பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு அமர்த்துகிறான். அந்தப் பெண் இறை பக்தி நிறைந்தவள். ரஸியேவின் கணவன் Hodjat ஒரு முரடன். பொதுவாக, மனைவி வேலைக்குச் செல்வதாக இருந்தால், அதற்கு அவளுடைய கணவனின் சம்மதம் வேண்டும். ஆனால், முன் கோபியான தன் கணவனிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல் அந்த வேலையில் வந்து சேர்கிறாள் Razieh. ஏதாவது வேலை செய்தால்தான், பொருளாதார ரீதியாக அவளுடைய குடும்பம் பிழைக்க முடியும். அதுதான்  உண்மையான நிலை. இன்னும் சொல்லப் போனால்- தன் இளம் வயது மகளையும் தான் வேலைக்குச் செல்லும் வீட்டிற்கு தன்னுடன் அழைத்துக் கொண்டே அவள் செல்கிறாள்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel