Lekha Books

A+ A A-

காஸ்ட் அவே - Page 2

Cast Away

நெருப்பில் குளிர் காய்வது, கடல் நீரைப் பருகுவது, கடலில் நீந்திச் சென்று மீன் பிடிப்பது, பிடித்த மீனை நெருப்பில் வேக வைத்து சாப்பிடுவது, வரையப்பட்ட மனித முகத்துடன் இருக்கும் Volley Ball உடன் உரையாடுவது- இப்படியே அவனுடைய நாட்கள் நீங்கிக் கொண்டிருக்கின்றன.

நான்கு வருடங்கள் கடந்தோடுகின்றன. இப்படியே அந்த தீவிலேயே இருந்து கொண்டிருந்தால் எப்படி? அங்கிருந்து கிளம்பிச் செல்வதற்கு என்ன வழி என்று அவன் யோசிக்கிறான். மானத்திலிருந்து கடலுக்குள் விழுந்த‘portable toilet ’ இன் ஒரு பகுதி ஒரு ஓரத்தில் கிடக்கிறது. அதை எடுத்த Chuck, அந்தப் பகுதியுடன் சில மரத்துண்டுகளைக் கொண்டு வந்து கயிறுகளால் இறுக கட்டுகிறான். அதன் மூலம் ஒரு மிதவை தயாராகிறது. எல்லாவற்றையும் தயார் பண்ணி வைத்து விட்டு, கிளம்புவதற்கான கால நிலை எப்போது சரியாக இருக்கும் என்பதை எதிர்பார்த்து அதற்காக காத்திருக்கிறான். புயலிலோ, சூறாவளியிலோ சிக்கிக் கொள்ளக் கூடாதே! நாட்கள் நகர்கின்றன. உரிய கால நிலை வருகிறது. இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும் என்று ஒரு நாள் மனதில் பட, தான் உருவாக்கிய அந்த மிதவையில் ஏறி அமர்ந்து தன் பயணத்தை அவன் ஆரம்பிக்கிறான்.

தான் நான்கு வருடங்கள் தனி மனிதனாக நடந்து திரிந்த, உலாவிய, துள்ளிக் குதித்த, அழுத, ஆதி மனிதனாக வாழ்ந்த, குமுறிக் கொண்டிருந்த, புதிய மனிதனாக ஆன... அந்த தீவிலிருந்து பிரியா விடை பெற்று அவன் தன் பயணத்தைத் தொடர்கிறான். பல நாட்கள் பயணம் தொடர்கிறது. இரவு, பகல், வெயில், குளிர், மழை என்று பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திடீரென்று ஒரு சூறாவளி... அதில் அந்த மிதவை அலைக்கழிக்கப்படுகிறது. மிதவையே உடைந்து சின்னா பின்னமாகி விடுமோ என்ற நிலை. Chuck ம் நீருக்குள் விழுந்து தத்தளிக்கிறான். எங்கே கடலுக்குள் மூழ்கி, உயிரை விட்டு விடுமோ என்ற சந்தேகம் அவனுக்கு உண்டாகி விடுகிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியாவது பிழைத்தாக வேண்டும் என்ற வெறியுடன் அவன் நீரில் நீந்தி, மீண்டும் மிதவையின் மீது ஏறி அமர்கிறான். அப்போதுதான் அவனுக்கே தெரிகிறது -  தான் மிகவும் கவனமாக தன்னுடன் எடுத்துக் கொண்டு வந்து, மிதவையின் ஒரு பகுதியில் வைத்த ‘வரையப்பட்ட மனித முகத்தைக கொண்ட அந்த Volley Ball’ கடல் நீருக்குள் விழுந்து விட்டது என்ற உண்மை. அவன் கவலையுடன் பார்க்கிறான். தூரத்தில் நீரில் அந்த Volley Ball மிதந்து, தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அது இருப்பது அவனிடமிருந்து மிகவும் அதிகமான தூரத்தில்... எனினும் அவன் விடுவதாக இல்லை. மீண்டும் நீருக்குள் இறங்கி, அந்த Volley Ballஐ நோக்கி மிதந்து செல்கிறான். ஆனால், அதற்குள் அந்த Volley Ball நீருக்குள் போய் விடுகிறது. கடந்த நான்கு வருடங்களாக தன்னுடைய நெருங்கிய நண்பனாக இருந்து... தன்னுடைய சந்தோஷங்களையும், துக்கங்களையும் பகிர்ந்து கொண்ட அந்த  Volley Ballலின் பிரிவைத் தாங்க முடியாமல், அவன் குமுறிக் குமுறி அழுகிறான்.

அவனுடைய பயணம் தொடர்கிறது. பயணத்தின்போது, ஒரு சரக்கு கப்பல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து Chuck உரத்த குரலில் கூச்சலிடுகிறான். அவனைப் பார்த்தவர்கள், அவன் ஏதோ ஆபத்தில் சிக்கியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். அவனுக்கு உதவ அவர்கள் முன் வருகிறார்கள்.

Chuck நகரத்திற்கு அழைத்து வரப்படுகிறான். நான்கு வருடங்களுக்குப் பிறகு தனக்கு அறிமுகமான முகங்களை அவன் பார்க்கிறான். சூறாவளியில் சிக்கி விபத்திற்குள்ளான விமானத்தில் பயணம் செய்த சிலர் உயிருடன் அப்போது காப்பாற்றப்பட்டும் இருக்கிறார்கள் சிலர் இறந்தும் போயிருக்கின்றனர். Chuck ஐ பல இடங்களிலும், கடலில் தேடியிருக்கிறார்கள். இறுதி வரை கண்டு பிடிக்கவே முடியவில்லை. கடைசியில் அவன் இறந்து விட்டான் என்று நினைத்து அவனுக்கு இறுதிச் சடங்குகளைக் கூட அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செய்து முடித்து விட்டார்கள்.

இதில் அதிர்ச்சி தரக் கூடிய விஷயம் என்னவென்றால்- அவனுடைய காதலியாகவும், மனைவியாகவும் இருந்தவளும், உடலின் பாதியாக இருந்தவளும், ஒன்றாக குடித்தனம் நடத்தியவளுமான Kelly, Chuck ன் பல் மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டு, ஒரு மகளையும் பெற்றெடுத்திருக்கிறாள். Chuck திரும்பி வந்தது குறித்து Kellyக்கு சந்தோஷமும், அதிர்ச்சியும் உண்டாகிறது. அவள் இன்னும் அவன் மீது அன்பும், காதலும் வைத்திருக்கிறாள். அவனை மறக்காமலும் இருக்கிறாள். ஆனால், ஒருவனுடன் திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் அவள், Chuck உடன் எப்படி வாழ முடியும்?

அவர்கள் இருவரும் பிரிவதைத் தவிர, வேறு வழியே இல்லை. தாங்கள் இருவரும் முன்பு ஒன்றாக பயணம் செய்த, ஒன்றாகச் சுற்றிய, பல சந்தோஷங்களைக் கண்ட காரின் சாவியை  Kelly, Chuck இடம் ஒப்படைக்கிறாள். மழை பெய்து கொண்டிருக்கும் அந்த இரவு நேரத்தில் தன் மீது இப்போதும் காதலுடன் இருக்கும் Kelly யிடம், ‘இப்போது உனக்கென்று அமைந்திருக்கும் வாழ்க்கையில் நீ தொடர்வதுதான் சரியானது’ என்று கூறி விட்டு, பிரியா விடை பெற்று கிளம்புகிறான் Chuck.

Chuck பயணம் செய்து, நகரத்தைத் தாண்டியிருக்கும் கிராமப் பகுதிக்கு வருகிறான். தான் இதுவரை பிரிக்காமல் தன்னுடன் கடந்த நான்கு வருடங்களாக வைத்திருந்த FedEX கூரியரின் பெட்டியை, அதில் எழுதப்பட்டிருந்த, அதை அனுப்பியவரின் முகவரிக்குப் கொண்டு செல்கிறான். அந்த முகவரி இருந்த வீடு ஆள் யாரும் இல்லாமல் வெறுமனே கிடக்கிறது. அதனால், அந்த பெட்டியை வாசல் கதவிற்கு அருகில் வைத்த அவன், அந்தப் பெட்டிதான் தன் உயிரைக் காப்பாற்றியது என்று அதற்கு அருகில் எழுதி வைக்கிறான்.

அங்கிருந்து கிளம்பி அவன் நான்கு சாலைகள் பிரியக் கூடிய ஒரு முனையில் வந்து நிற்கிறான்- காருடன். ட்ரக் ஒன்றில் வரும் ஒரு பெண் அவனிடம் ஒவ்வொரு சாலையும் எங்கு போகக் கூடியவை என்பதை விளக்கி கூறுகிறாள். அப்போது Chuck அந்தப் பெண்ணின் truck ஐப் பார்க்கிறான். அதில் வரையப்பட்டிருக்கும் படமும், தான் அந்த வீட்டில் வைத்து விட்டு வந்த பெட்டியில் இருந்த படமும் ஒன்று என்பதை அவன் உணர்கிறான்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel