தெருவிளக்கு
- Details
- Friday, 09 March 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7380

இருள் எத்திக்கும் வியாபித்திருந்தது. போகிற பாதைகூட சரியாகத் தெரியவில்லை. வானில் ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் "மினுக்மினுக்”கென்று கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. நிலவுகூட இன்னும் எழவில்லை.
சாலையின் திருப்பத்தில் பஞ்சாயத்து விளக்கொன்று மங்கலான ஒளியைப் பரப்பிய வாறு நின்று கொண்டிருந் தது. மங்கலான அந்த மண்ணெண்ணெய் விளக்கின் ஒளி, புகை படிந்து போன கண்ணாடிக் கூட்டை ஊடுருவி சற்று தூரத்திற்காவது பரவிக் கிடந்த இருளை விரட்டிக் கொண்டிருந்தது.