வாழ்க்கையின் முன்பகுதியில் கஷ்டமா? கவலையே பட வேண்டாம்!
- Details
- Category: ஜோதிடம்
- Published Date
- Written by சுரா
- Hits: 2058
வாழ்க்கையின் முன்பகுதியில் கஷ்டமா?
கவலையே பட வேண்டாம்!
- மகேஷ்வர்மா
ஒரு மனிதனின் ஜாதகத்தில் சிலருக்கு வாழ்க்கையின் முன் பகுதியில் சந்தோஷம் இருக்கும். சிலருக்கு மத்திய பகுதியில் சந்தோஷம் இருக்கும். சிலருக்கு மூன்றாவது பகுதியில் சந்தோஷம் இருக்கும். அதனால், மனிதன் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை என்று கூறும்போது, அந்த மனிதனின் ஜாதகத்தில் இருக்கும் லக்னத்தின் அமைப்பு, 3 க்கு அதிபதியான கிரகத்தின் அமைப்பு, 9 க்கு அதிபதியான கிரகத்தின் பலம் எவ்வளவு அதிக பலம் கொண்டதாக இருக்கிறதோ, அதற்கேற்றபடி அவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும்.
உதாரணத்திற்கு ஒரு மனிதரின் ஜாதகம்:
மேற்கண்ட ஜாதகத்தைக் கொண்டவர் வாழ்க்கையில் மிகப் பெரிய கஷ்டங்களை அனுபவித்தவர். பிறக்கும்போது இவருக்கு சனி தசை. அதற்குப் பிறகு புதன் தசை. இந்த லக்னத்திற்கு புதன் 8 க்கும், 11 க்கும் அதிபதியாக 10 இல் இருந்து அவருக்குக் கல்வியைக் கொடுத்தார். அறிவைத் தந்தார். அவர் பெரிய மனிதராக வரும்போது, 5 இல் இருக்கும் சனி, சூரியனுக்கு 8 இல் இருக்கும் சனி அவரை தடுத்து விட்டது. சுக்கிர தசை 1993 இல் இருந்து 2013 வரை. இந்த தசையில் இவர் மனிதர்களுடன் பேசுவது, பழகுவது என்று இருப்பார். ஆனால், இவருக்கு பெரிய அளவில் பண வசதி இருக்கிறது என்று கூற முடியாது. ஏனென்றால், இவர் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர். விருச்சிக லக்னத்திற்கு சுக்கிரன், 7 க்கும் 12 க்கும் அதிபதியான கிரகம் 10 இல் சூரியனுடன் இருக்கிறது. சுக்கிரன், கேதுவின் நட்சத்திரத்தில் இருக்கிறார். அந்த கேது 12 இல் இருக்கிறார். அதனால் அந்த கேது தசையில் இவருக்கு மீதமென்று எதுவுமே இருக்காது. இப்போது சூரிய தசை நடந்து கொண்டிருக்கிறது.
சூரியன், சுக்கிரனின் நட்சத்திரத்தில் இருக்கிறார். அதனால், இந்த சூரிய தசையும் அதிக பலனைத் தராது. ஆனால், இவருக்கு பல பெரிய மனிதர்களின் தொடர்பு இருக்கும். அவர்களால் இவருக்கு தேவையான பண வசதிகள் வந்து சேரும். 2 க்கும் 5 க்கும் அதிபதியான குரு பகவான் 9 இல் சந்திரனுடன் இருக்கிறார். அதனால், அடிப்படைச் செலவுகள் நிறைவேறி விடும். ஆனால், சந்திர தசையில் இவரின் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். ஏனென்றால், சந்திரனுடன் குரு, 9 இல் இருப்பதால், ஜககேசரி யோகம் உண்டாகும். அந்த குரு தன்னுடைய 5 வது பார்வையால் செவ்வாயைப் பார்க்கிறார். 9 வது பார்வையால் சனி பகவானைப் பார்க்கிறார். அதனால் இவருக்கு பின் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும்.
எந்த ஜாதகத்திலும் ஒரு மனிதனுக்கு சிரமங்கள் இருக்கும்போது, அவர் 2, 11 க்கு அதிபதியான கிரகத்தின் அமைப்பைப் பார்க்க வேண்டும். அந்த கிரகத்தின் பரிகாரங்களைச் செய்ய வேண்டும். 7 க்கு அதிபதியான கிரகம் அஸ்தமாகவோ, நீசமாகவோ இருந்தால், அவர்கள் அந்த கிரகத்திற்கான பரிகாரங்களைச் செய்தால், அவர்களுடைய தொழிலில் இருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, வாழ்க்கையில் சந்தோஷமாக வாழலாம்.
நடக்கும் தசைக்கு அதிபதியான கிரகம் நீசமாகவோ அஸ்தமாகவோ இருந்தால், அல்லது நட்சத்திரம் சரியாக இல்லையென்றால், அவர்களுக்கு அந்த தசை நடக்கும் காலத்தில் பல பிரச்னைகள் உண்டாகும். அப்போது அந்த தசா நாதனின் கோவிலுக்குச் சென்று, கடவுளை வணங்க வேண்டும். அந்த தசா நாதனின் பொருட்களை தானமாக அளிக்க வேண்டும். அதனால் அவர்களுக்கு அந்த தசையால் உண்டாகும் பிரச்னைகள் குறையும்.
தான் வாழும் வீட்டில் தசை சரியாக இல்லாமலிருக்கும்போது, தேவையற்ற பொருட்களை சேர்த்து வைக்கக் கூடாது. தன் லக்னாதிபதியும் 9 க்கு உரிய கிரகத்திற்குமான ரத்தினத்தை அணிய வேண்டும். பகவான் சிவனின் ஆலயத்திற்குச் சென்று, முன் பிறவி கர்மங்கள் குறைவதற்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும். சிவப்பு மலரை வைத்து சிவனை வழிபட வேண்டும். தன் முன்னோர்களின் திதி தெரியவில்லையென்றால், அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் செய்து, ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். பசுவிற்கு உணவு அளிக்க வேண்டும். அதனால், ஜாதகருக்கு முன்னோர்களின் சாபங்கள் நீங்கி, சந்தோஷம் உண்டாகும். தன் முன் பகுதி எப்போதும் கஷ்டமாக இருக்கிறதே என்று நினைத்து ஒருவர் கவலைப்படக் கூடாது. பிரச்னை வரும்போது, தன் குலதெய்வத்தை வணங்க வேண்டும். பகவான் சூரியனுக்கு நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். நெற்றியில் குங்குமம் அல்லது சந்தனப் பொட்டு வைத்து, கிழக்கு திசையைப் பார்த்து அமர்ந்து, தியானம் செய்ய வேண்டும். அல்லது தன் குரு கூறிய மந்திரத்தை 10 மாலைகள் (10x108) உச்சரிக்க வேண்டும். வீட்டிலிருந்து வெளியே வரும்போது, பகவான் கணேசனுக்குரிய மந்திரத்தைக் கூற வேண்டும். அல்லது ‘ஓம் கணேஷாய நமஹ’ என்ற மந்திரத்தைக் கூறிய பிறகு, தன்னுடைய வேலைகளைச் செய்ய வேண்டும்.
இவற்றைச் செய்தால், அவர்களுடைய தோஷங்கள் நீங்கி, வாழ்க்கையில் சந்தோஷமாக வாழலாம்.