அரசியலில் செல்வாக்கு பெற, பதவி பெற, செய்ய வேண்டிய பரிகாரங்கள்
- Details
- Category: ஜோதிடம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6960
அரசியலில் செல்வாக்கு பெற, பதவி பெற, செய்ய வேண்டிய பரிகாரங்கள்
(மகேஷ் வர்மா)
அரசியலுக்கு வர வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் தங்களுடைய ஜாதகத்தில் லக்னாதிபதியும், 5க்கு உரிய கிரகமும், 10க்கு உரிய கிரகமும், ராகுவும் ஒன்றாக இருந்தால், அவர்களுக்கு அரசியலில் வெற்றி கிடைக்கும்.
லக்னத்தில் லக்னாதிபதி உச்சத்தில் இருந்து, குருவால் பார்க்கப்பட்டால், அவர்களுக்கு பெயர், புகழ், அரசியல் செல்வாக்கு கிடைக்கும்.
லக்னத்தில் சூரியன் இருந்து 10இல் குரு உச்சம் பெற்றால், அல்லது செவ்வாய் உச்சமாக இருந்தால், அவர்களுக்கு பெயர், புகழ், பெரிய பதவிகள் கிடைக்கும். ராஜயோகம் உண்டாகும். 5க்கு அதிபதியான கிரகம் 5இல் இருந்து, லக்னத்திலிருந்து குருவால் பார்க்கப்பட்டால் அல்லது 9இலிருந்து குருவால் பார்க்கப்பட்டால், அவர்களுக்கு ராஜயோகம் உண்டாகும். லக்னத்தில் சனி உச்சமாக இருந்தால், அவர்களுக்கு சச யோகம் உண்டாகும். அதனால் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு தடவையாவது அவர்கள் ஒரு பதவியில் கட்டாயம் அமர்வார்கள்.
லக்னத்தில் செவ்வாய் இருந்தால், ரூச்சக யோகம் உண்டாகும். அந்த ரூச்சக யோகத்திற்கு குரு பார்வை இருந்தால், அவர்கள் பெரிய பதவியில் இருப்பார்கள். லக்னத்தில் செவ்வாய் லக்னாதிபதியாக இருந்து சந்திரனுடன் இருந்தால், அவர்களுக்கு பெரிய பதவிகள் கிடைக்கும். விருச்சிக லக்னத்திற்கு லக்னத்தில் செவ்வாய், 4இல் குரு, 10இல் சனி இருந்தால், அவர்கள் பெரிய தலைமைப் பதவியில் இருப்பார்கள்.
லக்னத்தில் சனி, 10க்கு அதிபதியுடன் இருந்தால், அவர்களுக்கு பெரிய பதவிகள் கிடைக்கும். லக்னத்தில் சனி, குருவால் பார்க்கப்பட்டு, சந்திரன் உச்சமாக இருந்தால், உலக அளவில் மிகப் பெரிய தலைவர்களாக இருக்க முடியும்.
லக்னாதிபதி குரு, செவ்வாயுடன் சேர்ந்து இருந்தால், அவர்கள் பெரிய பதவிகளில் இருப்பார்கள். சனி உச்சமாக இருந்து சந்திரனுக்கு 9இல் இருந்தால், அவர்களுக்கு பெரிய பதவிகள் கிடைக்கும். ரிஷப லக்னமாக இருந்து, 10இல் சூரியன், புதன் இருந்து, செவ்வாயால் பார்க்கப்பட்டால், பெயர், புகழ், பதவி ஆகியவை கிடைக்கும். செவ்வாய், சந்திரனுடன் இருந்து சூரியன், புதன் ஆகியவற்றால் பார்க்கப்பட்டால், அவர்களுக்கு பெரிய பதவிகள் கிடைக்கும்.
ஒரு பெரிய தலைவர் ஆவதற்கு தன்னுடைய ஜாதகத்தில் ஒரு மனிதனுக்கு லக்னாதிபதிவும், 10க்கு உரிய கிரகமும் நன்றாக இருக்க வேண்டும். அப்போது அவருக்கு பெயர், புகழ் கிடைக்கும். மக்களின் கவனம் அவர்களை நோக்கி திரும்ப வேண்டுமென்றால், அவர்களுக்கு 5க்கு உரிய கிரகம் 10இல் இருக்க வேண்டும். அல்லது லக்னத்தில் இருக்க வேண்டும். அல்லது உச்சம் பெற்று இருக்க வேண்டும். அல்லது குருவால் பார்க்கப்பட வேண்டும். அவர்கள் தொலை நோக்கு பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள். 10இல் ராகு இருந்து, லக்னாதிபதி உச்சமாக இருந்தால், ராகு தசை நடந்தால், அவர்களுக்கு ராகுவினால் பெரிய பதவிகள் கிடைக்கும்.
ஒரு பெரிய பதவியில் அமர்ந்து, அதில் பெரிய அளவில் பிரச்னைகள் உண்டாவதற்கு காரணங்கள்- 2இல் சனி, செவ்வாயால் பார்க்கப்பட்டால், உச்ச சூரியன் ராகுவால் பார்க்கப்பட்டால், உச்ச செவ்வாய் ராகு, சனியால் பார்க்கப்பட்டால், சந்திரன், சனி சேர்க்கை செவ்வாயால் பார்க்கப்பட்டால், நீச சனி குருவால் பார்க்கப்பட்டால் அந்தப் பதவியில் இருப்பவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்.
சனி, செவ்வாய் சேர்கை ராகுவால் பார்க்கப்பட்டால், சுக்கிரன் அஸ்தமாக இருந்தால், லக்னாதிபதி அஸ்தமாக இருந்தால், 10க்கு உரிய கிரகம் அஸ்தமாக இருந்தால், 10க்கு உரிய கிரகம் நீசமாக இருந்தால், அந்த கிரகத்தின் தசை நடக்கும்போது அவர்களுக்கு அந்த பதவி போய்விடும். சுக்கிர தசையில் ராகு புக்தி நடக்கும்போது, குரு தசையில் சனி புக்தி நடக்கும்போது, சந்திர தசையில் ராகு புக்தி நடக்கும்போது, பதவியில் பிரச்சினைகள் ஏற்படும். மனதில் குழப்பங்கள் உண்டாகும். ராஜயோகம் குறையும்.
8க்கு அதிபதியான தசை நடக்கும்போது, ஒரு மனிதனுக்கு பிரச்சினைகள் அதிகமாக இருக்கும், கோச்சாரத்தில் ஏழரை நாட்டு சனி நடக்கும்போது, அஷ்டம சனி நடக்கும்போது, கண்டக சனி நடக்கும்போது, குரு விரயத்தில் இருந்தால், 8க்கு அதிபதியின் தசை நடந்தால், அல்லது 12க்கு அதிபதியின் தசை நடந்தால், மனிதனுக்கு பதவியில் பிரச்னைகள் உண்டாகும்.
பிரச்சினைகள் தீர்ந்து, நல்ல சூழ்நிலை உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்கள்:
1. ராஜயோகம் உண்டாவதற்கு - லக்னாதிபதியான கிரகத்திற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். 10க்கு உரிய கிரகத்திற்கான பரிகாரத்தைச் செய்ய வேண்டும். 5க்கு உரிய கிரகத்தின் பொருட்களைத் தானமாக அளிக்க வேண்டும்.
2. ராகு, சனியின் தாக்கம் அதிகமாக இருந்தால், சத் சண்டி ஹோமம் செய்ய வேண்டும். அவர்கள் வசிக்கும் இடத்தில், கறுப்பு, பச்சை வர்ணங்களை நீக்கி விட வேண்டும். வீட்டின் டைல்ஸ் கறுப்பு நிறத்தில் இருக்கக் கூடாது. அரசமரமும், ஆலமரமும் வணங்கப்பட வேண்டும். கவுசாலாவில் பசுக்களைப் போற்றிப் பாதுகாத்து உணவு அளிக்க வேண்டும்.
3. ராகு, குரு, செவ்வாயின் பாதிப்பு உள்ளவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான செலவுகளைச் செய்ய வேண்டும். தங்களுடைய வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கி விட வேண்டும்.
4. சந்திரனின் பாதிப்பு உள்ளவர்கள் நீர் தொட்டி கட்ட வேண்டும். குளங்களைச் சீர் படுத்த வேண்டும். ஏழைக்களுக்கு தானமாக பால் அளிக்க வேண்டும். அல்லது மருத்துவ மனையில் பால் வசதிகள் செய்து தர வேண்டும். தன் அன்னையை மதிக்க வேண்டும்.
5. சூரியனின் பாதிப்பு உள்ளவர்கள் தங்களுடைய தந்தையை மதிக்க வேண்டும். அவரின் காலில் விழுந்து, ஆசீர்வாதம் பெற வேண்டும். வயதானவர்களுக்கு வெள்ளை நிற ஆடைகளை தானமாக அளிக்க வேண்டும். தங்களுடைய முன்னோர்களை வழிபட வேண்டும். சூரியனுக்கு பூஜை, அபிஷேகம் செய்ய வேண்டும். தங்களுடைய குருவின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும். வீட்டில் பங்க்ளாமுகி யந்திரத்தை ப்ராண பிரதிஷ்டை செய்து வைக்க வேண்டும். அல்லது பைரவர் யந்திரத்தைப் பூஜை செய்து வீட்டில் வைக்க வேண்டும். தன்னுடைய லக்னாதிபதியின், 9க்கு உரிய கிரகத்தின் ரத்தினத்தை அணிய வேண்டும்.
இவற்றைச் செய்தால், அரசியலில் நன்கு பிரகாசிப்பார்கள்.