ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்களின் வாழ்வில் சந்தோஷம் உண்டாக, செய்ய வேண்டிய பரிகாரங்கள்
- Details
- Category: ஜோதிடம்
- Published Date
- Written by சுரா
- Hits: 2542
ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்களின்
வாழ்வில்
சந்தோஷம் உண்டாக,
செய்ய வேண்டிய பரிகாரங்கள்
- மகேஷ் வர்மா
பல பெண்கள், ஆண்களால் ஏமற்றப்பட்டு கண்ணீர் விட்டு சோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சில பெண்களின் ஜாதகத்தில் அவர்கள் நல்ல வசதிகளைக் கொண்ட, நல்ல குணங்களாக கொண்ட கணவர்களைப் பெறுவார்கள் என்று இருக்கும். சிலரின் ஜாதகத்தின்படி அவர்களுக்கு தவறான கணவர்கள் கிடைப்பார்கள். சில நேரங்களில் அவர்களே கூட அப்படிப்பட்ட கணவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். தான் தேர்ந்தெடுத்த மனிதன் தன்னை சந்தோஷமாக வைத்திருப்பான் என்று கற்பனை பண்ணிக் கொண்டு அவர்கள் வாழ்வார்கள். ஆனால், அந்த மனிதன் அவளை ஏமாற்றி விட்டு, வேறு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருப்பான்.
அதற்கு அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் இருக்கும் சில கிரகங்களே காரணம்.
ஒரு பெண் படிக்கும்போது ஜாதகத்தில் ராகு தசை நடந்தால், அந்த ராகு 6, 8, 12 இல் இருந்தால், அவள் தவறான வழியில் தன் மனதைச் செலுத்துவாள். அதனால் பல பிரச்னைகள் உண்டாகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமடைந்து, புதன் – சந்திரனுடன் இருந்தால், அந்தப் பெண் தன் தகுதிக்கும் கீழே உள்ள ஆணுடன் நட்பு அல்லது உறவு வைத்திருப்பாள். அதனால் அவளுக்கு வாழ்க்கையில் பல பிரச்னைகள் உண்டாகும். தன் குடும்பத்துடன் உறவு இல்லாமல் பலவித மன கஷ்டங்களுடன், ஏமாற்றங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பாள்.
சுக்கிரன், சந்திரன், புதன் 2 இல் இருந்து, அதற்கு சனியின் பார்வை இருந்தால், அவள் தகுதியற்ற மனிதனைத் தேர்ந்தெடுப்பாள். அதனால் அவளுக்கு மனதில் பிரச்னைகள் இருந்து கொண்டேயிருக்கும். 7 க்கு அதிபதியான கிரகம் 10 இல் இருந்தால், அந்த கிரகத்திற்கு சனி, சூரியன் ஆகியவற்றின் பார்வை இருந்தால், அந்தப் பெண்ணின் கணவன் வெளியே வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பான். அவன் தன் மனைவியை ஏமாற்றிக் கொண்டிருப்பான்.
சூரியன், சந்திரன், புதன் 4 இல் இருந்து, அதற்கு சனியின் பார்வை இருந்தால், அந்த பெண் தன் கணவனால் மன கஷ்டத்திற்கு ஆளாவாள். 7 இல் சனி, 4 இல் சூரியன், லக்னத்தில் சந்திரன் இருந்தால், அந்தப் பெண் சந்தோஷத்துடன் இருக்க மாட்டாள். அதனால் வீட்டில் பல பிரச்னைகள் உண்டாகும்.
லக்னாதிபதி விரய ஸ்தானத்தில் சூரியனுடன் இருந்து, 11 இல் சுக்கிரன், செவ்வாய் இருந்தால், அவள் தன் கணவனுடன் சந்தோஷமாக இருக்க மாட்டாள். அவளுடைய கணவனால் பல பிரச்னைகள் உண்டாகும்.
4 இல் செவ்வாய், சுக்கிரன், 8 இல் சனி இருந்தால், கோபத்தால் அவள் தன் கணவனுடன் விவாதம் செய்து கொண்டேயிருப்பாள். அதனால் அவளுடைய கணவன் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பான்.
ஒரு வீட்டிற்கு தென் கிழக்கு திசையில் வாசல் இருந்து, படுக்கையறை வட மேற்கு திசையில் இருந்து, அந்த அறைக்கு தென் கிழக்கில் வாசல் இருந்தால், அவளுடைய கணவன் அவளை ஏமாற்றி விட்டு, வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பான்.
ஒரு வீட்டிற்கு தென் மேற்கு வாசல் இருந்து, அந்த வீட்டின் படுக்கையறை வட கிழக்கில் இருந்து, அந்த அறைக்கு தென் கிழக்கிலோ அல்லது தென் மேற்கிலோ வாசல் இருந்தால், அந்த வீட்டிலிருக்கும் குடும்பத் தலைவன் தன் மனைவிக்குத் தெரியாமல், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பான்.
4 இல் சூரியன், 7 இல் செவ்வாய், 10 இல் சனி இருந்தால், அவளுடைய கணவன் தனக்குச் சொந்தமான சொத்துக்களை இழந்து விட்டு, தன் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து கொண்டிருப்பான். அல்லது போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, அவளுக்குக் கஷ்டத்தைத் தருவான்.
பரிகாரங்கள்
1. காலையில் பெண்கள் குளித்து விட்டு, பகவான் சிவனை வழிபட வேண்டும்.
2. பகவான் சூரியனுக்கு நீரில் குங்குமம், சர்க்கரை கலந்து விட வேண்டும்.
3. கறுப்பு நிற ஆடையை அணியக் கூடாது.
4. வெள்ளிக் கிழமை விரதம் இருந்து, துர்க்கை ஆலயம் சென்று பூஜை செய்ய வேண்டும்.
5. ஞாயிற்றுக் கிழமை தலைக்கு குளிக்கக் கூடாது. தலைக்கு எண்ணெய் தேய்க்கக் கூடாது.
6. படுக்கும் அறையில் வட மேற்கு அல்லது தென் மேற்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கக் கூடாது.
7. தன் வீட்டிற்கு தென் மேற்கிலோ அல்லது தென் கிழக்கிலோ வாசல் இருந்தால், அதை மாற்றி விட வேண்டும்.
8. வியாழக் கிழமை அரச மரத்தைச் சுற்றி வந்து, விநாயகரைச் சுற்றி வர வேண்டும். விநாயகருக்கு நல்லெண்ணெய்யில் விளக்கேற்ற வேண்டும்.
9. ஜாதகத்தில் 9 க்கு அதிபதியான கிரகத்தின் ரத்தினத்தை அணிய வேண்டும்.
10. தன் பெற்றோரின் கால்களில் விழுந்து, அவர்களுடைய ஆசீர்வாதத்தை அந்தப் பெண் பெற வேண்டும். அதனால் அவளுடைய ஜாதகத்தில் இருக்கும் சூரியன், சந்திரன் ஆகியோரின் தோஷங்கள் குறைந்து, அவள் சந்தோஷமாக வாழக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.