உரிய வேலைகள் கிடைக்கவில்லையா? அதற்கான பரிகாரங்கள்
- Details
- Category: ஜோதிடம்
- Published Date
- Written by சுரா
- Hits: 2838
உரிய வேலைகள் கிடைக்கவில்லையா?
அதற்கான பரிகாரங்கள்
- மகேஷ் வர்மா
ஏராளமான பேர் படித்து விட்டு, அதற்குரிய வேலைகள் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். அதற்கு என்ன பரிகாரங்கள்?
ஒரு மனிதன் படிக்கும்போது, பல கனவுகளுடன் இருப்பான். படித்து முடித்து விட்டு, நல்ல வேலைகளில் அமர்வோம் என்ற நம்பிக்கையுடன் இருப்பான். பெயர், புகழுடன் இருப்போம் என்று ஆசைப்படுவான். ஆனால், படித்த பிறகு அதற்குச் சிறிதும் தொடர்பே இல்லாத வேலையில், விருப்பமே இல்லாமல் பலரும் அமர்ந்திருப்பார்கள். அதற்குக் காரணம் என்ன?
ஒரு ஜாதகரின் படிப்பு முடிந்த பிறகு, அவருக்கு அஷ்டம சனி அல்லது ஏழரை நாட்டு சனி நடந்தால், அவருக்கு அந்த நேரத்தில் விருப்பமான வேலை கிடைக்காது. 2 க்கும் 7 க்கும் அதிபதியின் தசை நடக்கும்போது, 12 க்கு அதிபதியின் அந்தர தசை நடந்தால் அவர்களுக்கு அப்போது அலைச்சல்கள் அதிகமாக இருக்கும்.
6 க்கும் 8 க்கும் அதிபதியின் தசை நடக்கும்போது, அவர்களுக்கு சரியான வேலை கிடைக்காது. ஜாதகத்தில் 2 இல் சூரியன், சனி அல்லது செவ்வாய் – சுக்கிரன் அல்லது செவ்வாய் – ராகு அல்லது சூரியன், சனி, ராகு இருந்தால், அவர்களுக்கு படிப்பு முடிந்தவுடன் சரியான வேலை கிடைக்காது.
7 இல் சனி – செவ்வாய் அல்லது செவ்வாய் – ராகு அல்லது சூரியன், சந்திரன், ராகு இருந்தால், அவர்களுக்கு படிப்பு முடிந்தவுடன், பொருத்தமான வேலை கிடைக்காது. 7 க்கு அதிபதி 6 இலோ அல்லது 8 இலோ இருந்தால், அவர்களுக்கு சரியான வேலை கிடைக்காது. 9 க்கு அதிபதியான கிரகம் 8 இல் இருந்தால், பல கஷ்டங்களை அனுபவித்த பிறகுதான் வேலை அமையும். 10 க்கு அதிபதி 6 இல் இருந்தால், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்து, வாய்ப்பை இழந்து விடுவார்கள்.
செவ்வாய் – சனி – ராகு சந்திரனில் இருந்து, 4, 8 அல்லது 12 இல் இருந்தால், அவர்களுக்கு பல அலைச்சல்களுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும்.
லக்னாதிபதி அஸ்தமாக இருந்தால், 10 இல் குரு பலவீனமாக இருந்தால், அவர்களுக்கு 28 வயதிற்குப் பிறகு சரியான வேலை அமையும். லக்னாதிபதி அஸ்தமாக இருந்து, 6 இலும் 9 இலும் பாவ கிரகம் இருந்தால், அவர்களுக்கு 32 வயதிற்குப் பிறகு சரியான வேலை அமையும். சந்திரன் பலவீனமாக இருந்தால், அல்லது நீசமாக இருந்தால், அந்த சந்திரனுக்கு 6, 8, 12 இல் குரு இருந்தால், அவர்களுக்கு அதிகமான அலைச்சலுக்குப் பிறகுதான் சரியான வேலை அமையும். லக்னத்தில் செவ்வாய் – புதன் – சுக்கிரன் அல்லது செவ்வாய் – சுக்கிரன் – சந்திரன் அல்லது செவ்வாய் – சனி – சந்திரன் இருந்தால், தங்களுடைய செயல்களால் அவர்களுக்கு பல தடைகள் உண்டாகும். அவர்கள் வாழ்க்கையில் அமைதியாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்படியென்றால்தான் அவர்களுக்கு சரியான வேலை கிடைக்கும்.
10 க்கு அதிபதியான கிரகம் உச்சமாக இருந்தால், அதற்கு குருவின் பார்வை இருந்தால், அவர்கள் தங்களுடைய முயற்சிகளால் வெற்றி காண்பார்கள். 10 க்கு அதிபதியான கிரகம் லக்னத்தில் இருந்தால், அவர்கள் முன் பகுதி வாழ்க்கையில் பல கஷ்டங்களையும் அனுபவித்து விட்டு, பின் பகுதியில் சுய முயற்சியால் முன்னுக்கு வருவார்கள். 10 க்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், அவர்கள் சுய முயற்சியால் 31 வயதிற்குப் பிறகு சந்தோஷமாக வாழ்வார்கள். தங்களுக்கு விருப்பமான தொழிலைச் செய்வார்கள். லக்னாதிபதி லக்னத்தில் இருந்து, 6 க்கு அதிபதி 6 இல் இருந்து, 11 க்கு அதிபதி 11 இல் இருந்தால், அவர்கள் தங்களுடைய பின் பகுதி வாழ்க்கையில், பலருக்கு நன்மைகளைச் செய்யக் கூடிய நிலையில் இருப்பார்கள்.
பரிகாரங்கள்
1. தினமும் காலையில் எழுந்து தன் உள்ளங்கைகள் இரண்டையும் சேர்த்து வைத்து, அவற்றைப் பார்க்க வேண்டும். பார்க்கும்போது ‘கராகே லக்ஷ்மி கர்மூலே சரஸ்வதி கர்மத்யே கோவிந்தம் ப்ரபாதே கர தர்ஷனம்’ என்ற மந்திரத்தைக் கூற வேண்டும்.
2. பூமியைத் தொட்டு வணங்க வேண்டும். அப்போது ‘ஓம் பூமாதேவியே நமஹ’ என்ற மந்திரத்தைக் கூற வேண்டும்.
3. தினமும் காலையில பகவான் சூரியனின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அல்லது ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படிக்க வேண்டும்.
4. சூரிய பகவானுக்கு குங்குமம் கலந்த நீரை விட வேண்டும்.
5. அமாவாசையன்று தன் முன்னோர்களுக்கு பிண்ட தானம் செய்ய வேண்டும். அல்லது ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். பசுவிற்கு உணவு அளிக்க வேண்டும்.
6. வீட்டில் ‘ஶ்ரீ சுதம்’ மந்திரத்தை தினமும் கூற வேண்டும். அல்லது வெள்ளிக் கிழமை மகாலட்சுமியின் படத்தை முன்னால் வைத்து, இதைப் படிக்க வேண்டும்.
7. ஜாதகத்தில் 9 க்கு உரிய கிரகத்தின் ரத்தினத்தை அணிய வேண்டும்.
8. வீட்டில் ஶ்ரீ யந்திரத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும். ஶ்ரீ யந்திரம் ஸ்படிகத்திலும் இருக்கலாம். ஆனால், அதை ப்ராண பிரதிஷ்டை செய்து, அதற்குப் பிறகுதான் பூஜை செய்ய வேண்டும்.
9. தெற்கில் தலை வைத்து படுக்க வேண்டும்.
10. வீட்டின் வட கிழக்கு பகுதி சுத்தமாக இருக்க வேண்டும். தேவையற்ற பொருட்களை நீக்கி விட வேண்டும்.